படிக்க – படைக்க – பரப்ப
நூல் விவரப் பட்டியல்
எரித்துவிடுங்கள் என்னை!
தீமை தரும் புத்தகங்களுக்குத் தடை!
அவற்றை எரித்துவிடுங்கள் என்று கட்டளையிட்டனர் ஆட்சியாளர்கள்.
மந்தமான எருதுகள் பூட்டிய பெரிய வண்டிகளில் பயணம் போயின புத்தகங்கள்.
எரிந்த புத்தகங்களிலிருந்து எழுந்தது பெருந்தீ!
நாட்டைவிட்டு துரத்தப்பட்ட ஒரு எழுத்தாளர்,
தடுக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தார்.
அவரது புத்தகங்களுக்குத் தடை இல்லை!
மேஜைக்கு ஓடினார் அவர். முட்டாள் ஆட்சியாளர்களை
நினைத்து நினைத்து கர்வத்தாலும் கோபத்தாலும்
நின்று எரிந்தது அவரது பேனா. அவர் எழுதினார்.
“என்னை எரித்துவிடுங்கள்!”
“உண்மையை மட்டுமே எப்போதும் எழுதினேன்.
பொய்யை எழுதுபவனாக, என்னையா நடத்துகிறீர்கள்?”
“என்னை எரித்துவிடுங்கள்!”
ஜெர்மன் நாட்டு கவிஞர், பெர்டோல்ட் ப்ரெக்ட். எழுதியது இது. அமெரிக்க கவிஞர். மைக்கேல் ஆர். புர்ச்சின் ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் : த.நீதிராஜன் ,
சவுத் விஷன் புக்ஸ்: ஓர் அறிமுகம்
சமூக மாறுதலுக்கான புத்தகங்களை வெளியிடுவதற்காக 1970களில் தொடங்கிய பதிப்பகத்தின் தற்போதைய பெயர்தான் சவுத் விஷன் புக்ஸ். 700க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான முக்கியமான புத்தகங்களின் விவரங்கள் இதில் உள்ளன.
ஜனநாயகத்தின் அடையாளம்தான் கருத்து. அது எழுத்தாக மாறும்போது மக்களிடம் அழுத்தமாக பதிகிறது. பெரும்பாலும் வாய்மொழியாகவே இன்றும் வரலாறு இருந்து வருகிறது. வரலாறை பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே எங்களது செயல்பாடு.
புத்துணர்ச்சியை அளித்து நம் ஆற்றலை புத்தகம் மேம்படுத்துகிறது. மனிதர்களுக்கு இடையில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறது. பல நூல்கள் பல ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தன. அவை மக்கள் வாசிப்பதற்கு அவசியம் கிடைக்க வேண்டிய நூல்களாக நாங்கள் கருதுகிறோம்.
உணவு, உடை, இருப்பிடத்துக்காக உழைக்கும் மக்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்தை புத்தகங்கள் பலப்படுத்தும். ஆனால், சாதாரண வாசகனை நூல்களின் விலை மிரட்டுகிறது. அவர்களிடம் புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பதற்கான எங்களின் தனித்துவமான அணுகுமுறையே ‘மக்கள் பதிப்பு விலை’. ஆகும். விலையை புத்தகங்களுக்கு நிர்ணயிக்கும்போது மொழியாக்கம் , எடிட்டிங், டைப்பிங், டிசைனிங் செலவுகளை கணக்கில் கொள்ளாமல் அந்தச் சுமையை வாசகருக்காக நாங்களே தாங்கிக்கொள்கிறோம். புத்தகங்களை அச்சடிப்பதற்கான செலவை அடிப்படையாகக் கொண்டு மக்கள் பதிப்பு விலையை நிர்ணயிக்கிறோம். புத்தகங்களை பத்து அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டுசெல்லும் ஊழியர்களுக்கு புத்தகக் கடைகளுக்கு அளிக்கும் தள்ளுபடியை அளித்து ஊக்கப்படுத்துகிறோம்.
உதாரணமாக, 560 பக்கங்கள் கொண்ட ‘சமூக நீதிக்கான அறப்போர்’ புத்தகத்துக்கு தாராளமாக 500 ரூபாய் விலை வைப்பார்கள். அதை மக்கள் பதிப்பு விலை 350 ஆக நிர்ணயித்து, அதனையும் பத்து புத்தகங்கள் முன்பணம் செலுத்தி வாங்குவோருக்கு ஒரு புத்தகம் 200 என்றவகையில் 2000 ரூபாய்க்கு அளிக்கிறோம்.
தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், பெண்களின் அமைப்புகள், மாணவர் – இளைஞர் அமைப்புகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், இன்ஜினீயர்கள், டாக்டர்கள், நடுத்தர வர்க்க அமைப்புகள், எழுத்தாளர்கள்,கலைஞர்கள், பண்பாட்டு போராளிகள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள், குடியிருப்பு சங்கங்களை அழைக்கிறோம். புத்தகங்களின் வாசிப்பை சமூகத்தில் மிகப் பரந்த அளவுக்கு பரப்புவதற்கான லட்சியக் கனவில் பங்கேற்குமாறு அனைவரையும் அழைக்கிறோம்.
இந்தப் பணியை சமூக ஊழியர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும் செய்யப் போவதில்லை. இது வரலாறு உங்கள் மீது சுமத்தியிருக்கும் கடமை. இந்த நூல்கள் அனைத்தும் விதைகளைப் போன்றவை. விதையுங்கள். பிறகு அறுவடைக்கு தயாராகுங்கள்.
சமீபத்தில் வெளிவந்தவை

A Crusade for Social justice
P.S.Krishnan : Bending Governence Towards The Deprived
Dr V.Vasanthi Devi
Pages 366 Price Hard Bound- Rs-650. PaperPack Rs-500
The book is an invaluable compendium for all those who believe in justice, human rights, the vision of the Indian constitution and material and social progress of all Indians. It does not stop with laying down the ideal, but shows how to take on the structure of a caste-class society and the Governments that safeguard the unjust structure, all be it, working from within the system. Students and teachers of issues of deprivation, exclusion and policies for inclusion would specially benefit from it. The book must be a prescribed text for trainees of India’s civil and other services, including the judicial service.
Dr V.Vasanthi Devi
Former Vice-Chancellor of Manonmaniam Sundaranar University,
Tamil Nadu
2. சமூக நீதிக்கான அறப்போர்
நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம் – பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)
ஆங்கிலத்தில் வே.வசந்திதேவி / தமிழாக்கம்: மு.ஆனந்தன்
பக்கங்கள் 560 – மக்கள் பதிப்பு விலை- ரூ.350
நூற்றாண்டுகளாக தொடரும் சாதியத்திற்கு எதிரான ஆயுதமே இந்நூல். சகாரா பாலைவனப் பகுதியில் உள்ள ஆப்ரிக்க நாடுகளின் மக்கள் நிலைமையைவிட மோசமான வாழ்நிலைமையில் உள்ள தலித்துக்கள், பழங்குடிகள் மற்றும் நிலமற்ற ஏழை பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக 70 ஆண்டுக் காலம் அசுரத்தனமாக உழைத்திட்ட பி.எஸ்.கிருஷ்ணன் என்கிற மாமனிதருடனான உரையாடல் மற்றும் இந்தியாவை ஆற்றல்படுத்துவதற்கான செயல்திட்டமும் அடங்கியதே இந்நூல்.
SENE, The Goddess of Tribal Empowerment
Dr Bhupinder Singh IAS (Rtd)
222 Pages Rs 300
This book narrates the story of a tribal girl, Sene, living in a village located in the remote Central Indian forested hills. She hails from a chief’s clan belonging to a tribe called Munda. Her life is full of traumas, much more than the life of any other tribal woman. I have drawn upon some live characters and even adopted their real names. For example Alka Madhok ji, a social activist, who in real life helped, at my request, rescue in Delhi a tribal girls from the clutches of traffickers figures exactly as social activist in the concerned chapter. Second, I borrowed a couple of incidents from the early life of Savitri Bodra, my adopted tribal daughter staying with us for the last more than two decades. My study of sociology and field experience in development administration enabled me to weave the real with fiction.
It is said that fact is stranger than fiction. It may be true to an extent. But it is difficult to accept it as an axiomatic truth. Sometimes, the fictional trumps the factual. I have mentioned that this book is a blend of sociology and fiction. Let me add: Sociology without ground realities is like dried fish and fiction without theoretical grounding is a flight of chimerical wish.
Dr Bhupinder Singh IAS (Rtd)

3. தலித் மக்கள் மீதான வன்முறை –
பிரெண்ட்லைன் இதழ் வெளியிட்ட கட்டுரைகள் (1995-2004) –
ஆங்கிலத்தில்: எஸ்.விஸ்வநாதன் / தமிழாக்கம்: த.நீதிராஜன்
பக்கங்கள் – 387. மக்கள் பதிப்பு விலை- ரூ.300
மூத்த பத்திரிகையாளர் மறைந்த திரு. எஸ். விஸ்வநாதன் அவர்களின் கட்டுரைகள் சாதி சமூகத்தின் செயல்பாட்டையும் குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கையையும் நம் முன்னே படம்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். தமிழகத்தின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தை ரத்தமும் சதையுமாக நம்முன் இது வைக்கிறது. இளம் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூல் இது. தலித் மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கொள்கை உருவாக்கத்தில் ஆதார ஆவணமாக இது பயன்படும். சாதி சமூகத்தில் வாழும் இளைஞருக்கு இந்தக் கட்டுரைகள் சனநாயகத்தை அறிமுகப்படுத்தும்.
4. சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்
ஆங்கிலத்தில் : பி.எஸ்.கிருஷ்ணன் / தமிழாக்கம்: த.நீதிராஜன்
பக்கங்கள் – 194. மக்கள் பதிப்பு விலை- ரூ.150
சமூக நீதிக்காக செயல்படுகிற ஜனநாயக ஊழியருக்கான கையேடு இது. இந்திய சமூகத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பணிகள் நின்று போன இடத்திலிருந்து தனது பணிகளைத் தொடங்கிய ஒரு மனிதரின் நூல் இது. அரசியல் சாசனத்தில் உள்ள சமூக நீதிக் கோட்பாடுகளைச் சமூகத்தில் நடைமுறைப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக அவர் செய்த முயற்சிகளின் அனுபவம் தந்த மேடையில் நின்று அவர் செய்துள்ள ‘சாதி ஒழிப்புக்கான அரசியல் சாசனத் திருத்தம்’தான் இந்த நூலின் பிரகடனம். அதன் எதிரொலி நீண்டகாலம் ஒலிக்கும்.
6.சோவியத் புரட்சியின் விதைகள்
வே.மீனாட்சி சுந்தரம்
பக்கங்கள் – 88. மக்கள் பதிப்பு விலை- ரூ.70
சோவியத்தைப் பற்றிய நிறை குறைகளை பலர் எழுதி வருகின்றனர். அத்தகையோரின் எழுத்துக்களையும், முதலாளிகளிடமிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோணத்தில், சில நிபுணர்கள் எழுதுவதையும் இந்தப் புத்தகம் ஆதாரங்களாகக் கொண்டுள்ளது. மார்க்சியத்தை உலக மக்களின் பார்வைக்கு கொண்டுவந்தது சோவியத் புரட்சியே. மக்களின் மகிழ்வான வாழ்வுக்கு வழிகாட்டுகிற தத்துவமாக நீடிக்கும்வரை மார்க்சியத்தை யாராலும் வீழ்த்த முடியாது. அந்தப் பார்வைக் கோணத்திலிருந்து அதன் நிறை குறைகளை விவாதிக்குமாறு வாசகர்களை இந்தப் புத்தகம் வேண்டுகிறது.
7. சாதி தேசம் பண்பாடு
ந.இரவீந்திரன்
பக்கங்கள் – 256. மக்கள் பதிப்பு விலை- ரூ.200
இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் ந.இரவீந்திரன் பல ஆண்டுகளாக, இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள சமூகங்களின் தனித்தன்மைகளை ஆய்வு செய்பவர். மக்கள் மத்தியில் செயல்பட்ட ஒரு சமூக ஊழியராகவும் இருப்பவர். தேசியம், சாதியம் பற்றிய அவரது கட்டுரைகளின் தொகுப்பு இது. மார்க்சியத்தின் வரிகளுக்குள் மட்டுமே விவாதங்களையும் செயல்பாடுகளையும் வைத்துக்கொள்கிற போக்கு நிலவுகிற காலகட்டத்தின் அதன் உணர்ச்சியை ஆழமாக புரிந்துகொண்டு விவாதிப்பவர் அவர். அவரது விவாதமே இந்த நூல்.
8, பழங்குடி மக்களின் தாய் : கோதாவரி பாருலேகர் –
ஆங்கிலத்தில் அசோக் தாவ்லே / தமிழாக்கம் – சொ.பிரபாகரன்
பக்கங்கள்- 48. மக்கள் பதிப்பு விலை – ரூ.25
மகாராஷ்ட்ரத்தின் வார்லி ஆதிவாசிகளை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்த போராளி கோதாவரி பாருலேகரின் நூற்றாண்டை ஒட்டி “Godavari Parulaker: A Centenary Tribute’’ என்கிற கட்டுரை மார்க்சிஸ்ட் ஆங்கில இதழில் 2007இல் வெளிவந்தது. இன்று அந்தப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களின் தலைவராக உள்ள தோழர் அசோக் தாவ்லே அதை எழுதியிருந்தார். கோதாவரி பாருலேகரின் வாழ்க்கை, அவரது போராட்ட பாதை, இந்திய விவசாயிகளின் எழுச்சிப் பேராட்டங்களை பற்றி இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்களையும் அளித்த அந்தக் அந்தக் கட்டுரையின் தமிழாக்கமே இது.

9, வெற்றி நமதே – சேகுராவின் படைப்புகளும் உரைகளும்
ஆங்கிலப் பதிப்பாசிரியர் : ஜான் கேரஸ் / தமிழ் பதிப்பாசிரியர் : சொ.பிரபாகரன்
பக்கங்கள்-120. மக்கள் பதிப்பு விலை- ரூ.70
சேகுவாராவின் சிந்தனைகளை அவரது எழுத்துகளின் மூலமாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.கியூபாவின் விடுதலைப் போராளி ஜோஸ் மார்ட்டியின் வரிகளோடு ஒரு கட்டுரையை சே குவாரா தொடங்கியிருக்கிறார். “ இது உலைகளின் காலம். ஜுவாலைகளுக்கு மட்டும்தான் இங்கு இடம்” என்கிறது அது. அவர் வாழ்க்கையைப் பார்த்தவிதத்தையும் அதில் தனது இடத்தை புரிந்துகொண்ட விதத்தையும் அது காட்டுகிறது. அற்பத்தனங்கள் அணுக முடியாத ஜுவாலையாக அவர் நின்று எரிகிறார். அந்த வெப்பத்தை நீங்கள் புத்தகத்தில் உணரலாம். அவரது வரிகளின் உணர்ச்சியாக ஜொலிக்கும் ஜுவாலையை நீங்கள் உணருங்கள். நமது மக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அவற்றை எரிக்கும் ஜுவாலையாக நீங்கள் மாறுங்கள்.
14. தூக்குமேடைத் தியாகி பாலுவின் இறுதி நாட்கள் : சிலிர்க்க வைக்கும் நேரடி சாட்சியம்! (1954இல் வெளியான அரிய ஆவணம்)
ஐ. மாயாண்டி பாரதி
பக்கங்கள் 32 . மக்கள் பதிப்பு விலை ரூ. 15
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாகி பாலு 1951இல் தூக்கிலிடப்பட்டார். அவர் மரணத்தை வீரத்தோடு எதிர்கொண்டதை அவரோடு சிறையில் இருந்த சுதந்திரப் போராட்ட வீர்ர் மாயாண்டி பாரதி உணர்ச்சிபூர்வமான காவியமாக வடித்திருக்கிறார்.
16. பி.சுந்தரய்யா: செங்கொடி இயக்கத்தின் காலக் கண்ணாடி
ஆங்கிலத்தில்: அட்லூரி முரளி,வி.ஆர்.பொம்மாரெட்டி,வி.அனுமந்தராவ் / தமிழாக்கம்: சொ.பிரபாகரன்,
பக்கங்கள் 32 . மக்கள் பதிப்பு விலை ரூ. 10
‘என் வாழ்க்கை பூராவும் என் திறமைகள் அனைத்தையும் மனித சமுதாய விடுதலை என்னும் மகோன்னத லட்சியத்திற்கே அர்ப்பணித்தேன் – என்று கண்ணை மூடும்போது நினைக்கும்படி வாழ்வதுதான் மனித வாழ்க்கைக்குப் பெருமை அளித்திடும்’ என்கிறார் புகழ் பெற்ற சோவியத் எழுத்தாளர் ஆஸ்ட்ரோவ்ஸ்கி. இந்த இலக்கணத்துக்கு ஒப்ப தனது வாழ்நாளை நடத்தி முடித்தவர் தோழர் பி. சுந்தரய்யா. அவரது அரசியல் தத்துவத்தை அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
17. சினிமா ஓர் அற்புத மொழி
எம்.சிவக்குமார்
பக்கங்கள் 176 . மக்கள் பதிப்பு விலை ரூ. 150
ஹங்கேரி அறிஞரான பேல பெலாஸ் எழுதிய புத்தகத்தை ‘சினிமா கோட்பாடு’ என்ற பெயரில் தமிழாக்கியவர் சிவக்குமார். சென்னை பிலிம் சொஸைட்டியை நிறுவியவர்களில் ஒருவர். சினிமாவின் மீது அளவிலா காதல் கொண்ட இவர் ஏராளமான குறும் படங்களை, ஆவணப் படங்களை இயக்கியவர். திரைப்படக் கல்லூரிகளில் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் இவர் ஏராளமான மாணவர்களை பயிற்றுவித்திருக்கிறார். அவர் எழுதிய அனுபவத் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.
அச்சில் உள்ளவை
11, மாவோ : ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்
ஆங்கிலத்தில் : எட்கர் ஸ்நோவ் / தமிழாக்கம் : எஸ்: இந்திரன்
பக்கங்கள் 112 . மக்கள் பதிப்பு ரூ. 70
மாவோவின் வாழ்க்கையை நாம் மறுபடியும் வாசிக்க வேண்டியது அவசியம். சீனா எனும் நாடு எப்படி செயல்படுகிறது பாருங்கள். மார்க்சிய, லெனினிய பார்வையை அது ஏற்றுக்கொண்டது. ஸ்டாலினியத்தின் அதிகாரத்துவ போக்கை விமர்சனத்துடன் உள்வாங்கிக்கொண்டது. மாவோ அளித்த சிந்தனைப்போக்குடன், உலக கம்யூனிச சிந்தனைப் போக்கையும் அது புரிந்துகொண்டு செயல்பட்டது. தனது நாட்டின் தேசிய உணர்ச்சியையும் கைவிடவில்லை. இந்த திசைவழியில்தான் அந்த நாடு தன்னை அங்குலம் அங்குலமாக வளர்த்துக் கொண்டு, இன்றைய நிலையை அடைந்துள்ளது. சீனாவைப் போலவே சுதந்திரம் அடையும்போது வளர்ச்சியடையாத, விவசாய நாடாக இருந்த இந்தியா, மாவோவின் வாழ்க்கையை மறுபடி வாசிக்க வேண்டியது அவசியம். மாவோயிச சிந்தனைகளை உள்வாங்குவது, மார்க்சியத்தை இன்றையச் சூழலுக்குப் புரிந்து கொள்வதற்கு மிகவும் அவசியம்.
10. பிணந்தின்னிகள்
மலையாளத்தில்: சி.ஆர் / தமிழாக்கம்: பி.ஆர். பரமேஸ்வரன்
பக்கங்கள் 64. மக்கள் பதிப்பு விலை ரூ. 40
அவசர நிலை காலம் என்பது அழிக்க முடியாத குறியீடு. அதன் உள்ளடக்கம் இன்றைக்கும் ஆட்சியாளர்களிடமும் காவல்துறையினரி டமும் படிந்தே கிடக்கின்றன. கிடக்கும். தோளில் கைப்போட்டுக் கொண்டே கழுத்தை நெரிக்கம் கொடுமையைப் போல் ஜனநாயகம் பேசிக் கொண்டே உரிமைகளை கொலை செய்யும் குணாம்சம் நீடிக்கவே செய்கிறது.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதாய்’ச் சொன்ன வள்ளலார் வாழ்ந்த பூமியில் அரசு வன்முறைகள் காவல்துறை மூலம் அரங்கேறும் போது அதனை (அ)தட்டி கேட்கும் துணிச்சலை ஒவ்வொருவருக்கும் தரவல்லது இந்தப் புத்தகம். அதே வள்ளலார் சொன்னது போல ‘கருணையிலா ஆட்சி கருகி ஒழிய’ வேண்டுமென்றால் கொடுமை கொண்டு பொங்குகிறவர்களாய், நீதி கேட்க நெஞ்சு நிமிர்த்துகிறவர்களாய், அநீதிக்கு அஞ்சாதவர்களாய் அடங்காதவர்களாய், வாலிபர்களையும் மாணவர்களையும் உருவாக்கும் புத்தகம் இது.
13. புரட்சிகளின் நூற்றாண்டு
ஆங்கிலத்தில் : அய்ஜாஸ் அகமத் / தமிழாக்கம் : ப.சகஸ்ரநாமம்
பக்கங்கள் 112. மக்கள் பதிப்பு விலை: ரூ. 70
இருபதாம் நூற்றாண்டு மனித குல வரலாற்றில் மறக்கமுடியாத,
மகத்தான நூற்றாண்டு. கடந்துபோன
நூற்றாண்டைத் திரும்பிப் பார்க்கும்போது அது விட்டுச்சென்ற
சாதனைகளும், வேதனைகளும், எழுச்சிகளும், வீழ்ச்சிகளும்,
புரட்சிகளும், எதிர்ப்புரட்சிகளும் இன்னும் ஏராளமான வரலாற்றுப்
பதிவுகளும் மனக்கண்ணில் நிழலாடுகின்றன. பிரபல வரலாற்றறிஞர்
எரிக் ஹோப்ஸ்பாம் இதை ‘1914ல் துவங்கி 1989ல் முடிவடைந்த /
குறுகிய கால நூற்றாண்டு’ என வர்ணிக்கிறார். பல நம்பிக்கைகளையும்,
எதிர்பார்ப்புகளையும் உருவாக்கிய இந்த நூற்றாண்டு மனித குலத்தின்
மகத்தான கனவுகளுக்கு தனது பதிலாக தோல்விகளையும்,
நிராசைகளையும் கொடுத்துள்ளது. இந்த நூலின் கட்டுரைகளை எழுதிய மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது கூறுகிறார்: “21ம் நூற்றாண்டு –
இன்னும் தொடங்கவில்லை; அது மிக விரைவில் தொடங்குவதற்கான சாத்தியத்தையும் காண முடியவில்லை. பின்னடைவுகளை பின்னடையச் செய்யாமல் அதைத் தொடங்க முடியாது” என்கிறது இந்தப் புத்தகம்.
பாசிசத்தின் இந்திய முகம்
வே.மீனாட்சி சுந்தரம்
பக்கங்கள் – 72. மக்கள் பதிப்பு விலை- ரூ.50
மக்களைத் திசை திருப்பும் அரசியல் தீவிரப்படுத்தப்படுவதை மசூதி இடிக்கப்பட்டபோது மக்களை எச்சரித்தது இந்தப் புத்தகம். கணிசமான அளவுக்கு மேம்படுத்தப்பட்டதாக தற்போது வெளியாகியிருக்கிறது இது.
இந்து மதத்தை முகமூடியாக போட்டுக்கொண்டு வருகிற பாசிசத்தை எதிர்கொள்வதற்காக மக்களைத் திரட்டும்போது மத நம்பிக்கையாளர்கள் அனைவரையும் திரட்டும்வகையில் நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும். அதற்கு இந்த புத்தகம் உதவும்.
26. இரட்டை தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்
ந.இரவீந்திரன்
பக்கங்கள் 200. மக்கள் பதிப்பு விலை: ரூ.125
இன தேசியம், மொழி தேசியம், சாதி தேசியம் என்று தேசியம் பற்றிய கருத்துகளை வளர்த்துச் செல்வார் பேராசிரியர் ந. இரவீந்திரன். வர்க்கத்தை மட்டுமே வாழ்நிலை யதார்த்தமாகவும் இனத்தையும் சாதியையும் வெறும் கருத்துகளாகவும் பாவிக்கிற மனநிலை சிலரிடம் இருக்கும். ஆனால், இரவீந்திரனின் எழுத்துகளை வாசிப்பவர்களுக்கு சாதியும் இனமும் கருத்தாக மட்டுமல்ல, மனித இனத்தின் உயிரியல் பரிணாம வளர்ச்சியின் இயல்பான தர்க்கரீதியான வாழ்நிலையாகவும் இருக்கும். அந்த வாழ்நிலையிலிருந்து பட்டுத் தெறிக்கிற கருத்துகளாகவும் இருக்கும். இனமும் வர்க்கமும் சாதியும் பின்னிப் பிணைந்து இயங்குகிற உயிர்ப்பான ஒரு சமூக யதார்த்தத்தின் முழுமையை அவர் நமக்கு அறிமுகப்படுத்த உழைப்பார். ஒடுக்கப்படும் தேசியங்கள், ஒடுக்கும் தேசியம் என்று தேசியங்களைப் பிரித்து இன தேசியங்களுக்குள்ளே சமூக நீதியைக் காண்பார்.
27. சாதி சமூக வரலாற்றில் வர்க்க போராட்டம்
ந.இரவீந்திரன்
பக்கங்கள் 200. மக்கள் பதிப்பு விலை: ரூ.125
சமத்துவ சமூகத்தைப் படைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும்போது வர்க்கமும் சாதியும் சமூகத்தில் நிதர்சனமாக உள்ளன என்பதை கவனத்தில் எடுப்பது அவசியம். வெறும் வர்க்கவாதம் மட்டுமே பேசுவதும் அல்லது சாதிய வாதம் மட்டுமே பேசுவதும் சுரண்டல் சக்திகளுக்குத்தான் உதவும் என்கிறார் பேராசிரியர் ந.இரவீந்திரன்.
28. மதமும் மாரக்சியமும்
ந.இரவீந்திரன்
பக்கங்கள் 295. மக்கள் பதிப்பு விலை: ரூ.180
வரலாற்றுக்கும் புனையப்பட்ட புராணங்களுக்கும் தமிழ்ச் சமய இலக்கியங்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் தொடர்புகளையும் சமூக _ வரலாற்றியல் பார்வை இன்றி தெளிவாக பார்க்க முடியாது. மார்க்சிய சமூகவியல் – வரலாற்றியல் பார்வை கொண்டு இந்த நூல் மதங்களை ஆய்வு செய்கிறது. மதங்களின் தோற்றம், வளர்ச்சி, மார்க்சியம் மற்றும் நாத்திகவாதம் தொடர்பான பல கேள்விகளுக்கு இந்த நூல் பல கருத்தாக்கங்களை முன்வைக்கிறது.
29. திருக்குறள் கல்வி சிந்தனைகள்
ந.இரவீந்திரன்
பக்கங்கள் 185. மக்கள் பதிப்பு விலை: ரூ.125
பேராசிரியர் ந.இரவீந்திரன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இது. தமிழின் முக்கியமான பெருமைகளில் ஒன்றான திருக்குறளில் கல்வி பற்றிய சிந்தனைகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை மிக ஆழமான முறையில் ஆய்வு செய்துள்ளார் இரவீந்திரன்.
12, மகாத்மாக்கள்
(தெலங்கானா ஆயுதப் போராளிகளுக்கு உதவிய தியாகிகள்)
தெலுங்கில் : ஜி. வெங்டேஸ்வர ராவ் / தமிழாக்கம் : ஏ.ஜி. எத்திராஜூலு
பக்கங்கள் 112. மக்கள் பதிப்பு விலை: ரூ. 75
தெலங்கானா போராளிகளை பாதுகாத்தோரின் வீர வரலாறுகள் இவை. மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, வீரர்கள் வெல்லமுடியாத மாவீரர்களாக பரிணாமம் அடைகிறார்கள். தாய் தந்தையரும், மனைவி மக்களும், சகோதர சகோதரிகளும் ஆதரவளிக்கும்போதே அவர்களின் மன உறுதியும் உற்சாகமும் பல மடங்காய் பெருகும். உணவு வழங்குவோர், செய்திகளைத் தெரிவிப்போர், ரகசியத் தொடர்புகளைப் பாதுகாப்போர்தான் வீரர்களை எதிரிகளிடமிருந்து காப்பவர்கள். சித்ரவதைகள் செய்தபோதும், தியாக உணர்வுடன் வீரர்களைக் காட்டிக்கொடுக்காமல் பாதுகாத்த கோயா என்னும் ஆதிவாசிப் பெண் பண்டி ராஜக்கா, பேரன்னை வெர்ரம்மா, மாவீரன் லிங்கையா, சலவையாளர், லம்பாடிப் பழங்குடியினர், முஸ்லிம் அன்னையர், தந்தையர் என தியாகம் புரிந்த மகாத்மாக்கள் பலர். அவர்கள் இல்லாவிட்டால், போராளிகளில் பலர் பகைவனுக்குப் பலியாகி இருப்பார்கள். சிறந்த மனிதர்களின் தியாக வாழ்க்கைகளை, அவர்களுடைய குடும்பங்களின் லட்சிய வாழ்க்கையை, வலிமையையும், மன உறுதியையும், சாகசங்களையும் பதிவு செய்துள்ளார் ஜி. வெங்டேஸ்வர ராவ்.
15. தாகூரின் இந்தியா
ஆங்கிலத்தில்: அமர்த்தியாசென் / தமிழாக்கம்: சொ.பிரபாகரன்
பக்கங்கள் 80 . மக்கள் பதிப்பு விலை ரூ. 50
சோஷலிசத்தின் பால் ரவீந்திர நாத் தாகூர் ஈர்க்கப்பட்டார். ஆனால். சோவியத் சோஷலிசத்தின் மீதான மாறுபட்ட கருத்துகளையும் பதிவு செய்துள்ளார். தாகூரை வலதுசாரியாக பார்க்கும் பார்வை முன்பு இருந்தது. ஆனால், மார்க்சியத்தை சரியாகப் பயின்றவர்கள், எவ்வாறு இதனை எதிர்கொண்டனர் என்பதை புத்தகம் விளக்குகிறது. தமிழ்ச் சமுகத்தில் சில ஆளுமைகளை மதிப்பிடும்போது இத்தகைய தவறுகள் நடந்தன. தமிழ் இலக்கிய உலகின் அடையாளங்களாக விளங்குகின்ற திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் போன்றோரின் படைப்புகளை நாம் சரியாகக் கணித்து சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த ஆய்வு நூல் அதற்கு வழிகாட்டும்.
18. மௌன வசந்தம் – பூச்சி கொல்லிகளின் விபரீத விளைவுகள்
பதிப்பாசிரியர் தி.சுந்தரராமன்
பக்கங்கள் 64. மக்கள் பதிப்பு விலை ரூ. 40
அளவுக்கு அதிகமான பூச்சிக் கொல்லிகளை உபயோகிப்பது என்பது, இயற்கையையும் மனித வாழ்வையும்எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதை எடுத்துக்காட்ட ரேச்சல் கார்சன் என்ற அமெரிக்க சுற்றுப்புறச்சூழல் அறிஞர் தனது அமெரிக்க அனுபவங்களைக் கொண்டு எழுதிய புத்தகத்தின் சுருக்கமே “மௌன வசந்தம்’’. முதன்முதலாக பூச்சிக் கொல்லியின் அபாயங்களை எடுத்துக் கூறி உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு இந்த விஷயங்களைப்பற்றி எச்சரித்த மிகச் சிறந்த புத்தகம் இது.
19. வரலாறு என்னை விடுதலை செய்யும்
பிடல் காஸ்ட்ரோ
பக்கங்கள் 96. மக்கள் பதிப்பு விலை ரூ. 60
வாக்களிக்கப்பட்ட நிலத்தை நோக்கி ஏக்கத்துடன் நடந்து செல்லும் மோசஸைப் போல ஒருபோதும் தனக்குச் சொந்தமாகாத நிலத்தில் சதா சர்வகாலமும் உழைத்துச் சாகும் விவசாயிக்கும் பாட்டாளிகளுக்கும் ஒரு தேசத்தையே சொந்தமாக்கிய கியூபப் புரட்சியின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ. வரலாற்றை ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலை செய்யப் போராடும் ஒரு தத்துவத்தின் புதல்வரல்லவா? வரலாறு தேங்கி நிற்கும் போதெல்லாம் புயல் வீசும் உரைகளாலும் செயல்களாலும் காலத்தை முன்னோட்டும் காஸ்ட்ரோ நம் காலத்து நாயகனாக நம்மோடு வாழ்கிறார்.
20 – எஸ்.ஏ.தங்கராஜ்: ஊறல் குழிகளிலிருந்து உரிமை போராட்டத்திற்கு
எஸ். சுதந்திரன்
பக்கங்கள் 80. மக்கள் பதிப்பு விலை ரூ. 50
எஸ்.ஏ. தங்கராஜன் அவர்களை நினைவு கூறுவது என்பது வெறுமனே நமது தலைவர்களைப் புகழ்வதற்கு அல்ல, நமது முதுகிலே நாமே தட்டிக்கொள்வதற்கும் அல்ல. மாறாக, அவரும் அவர் போன்ற தலைவர்களும் பெற்றிருந்த வேகத்தை, உறுதியை, வீரத்தை, லட்சிய தாகத்தை நாமும் பெறவேண்டும் என்று உறுதி கொள்வதற்காகத்தான். இன்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரும், தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களுக்கான உரிமைப் போரும் சமுதாய சீர்திருத்தத்திற்கான, ஜாதிய கொடுமைகளுக்கு எதிரான, அனைத்து வகைகளிலும் சமத்துவத்திற்கான போராட்டம் தொடரவேண்டியிருக்கிறது. தோழர் எஸ்.ஏ. தங்கராஜன் போன்ற தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வை, உறுதியை நெஞ்சில் ஏந்தி, இன்றையக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்.
21. உடைந்து நொறுங்கிய நாகரிகம்:
மாற்றத்தின் காலத்தில் சாதிய சமூகம்
ஆங்கிலத்தில்:லேன்ஸி ஃபெர்ணான்டஸ், சத்தியஜித் பட்கல் / தமிழாக்கம்: இரா.சசிகலா
பக்கங்கள் 200. மக்கள் பதிப்பு விலை: ரூ.125
இன்று இந்தியாவை துன்புறுத்தும் பயங்கரமான அரசியல் சமூகப் பிளவுகளுடைய தோற்றுவாய் எது? அனைத்து அரசியல் சித்தாந்தங்களும் கட்சிகளும் தங்களுடைய கவர்ந்திழுக்கும் சக்தியை ஏன் இழந்திருக்கின்றன? சாதிய சமூகக் கட்டமைப்பில் முதலாளித்துவம் எவ்வாறு ஒரு வரலாற்று நாகரிகப் பெயர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் இந்திய முதலாளித்துவம் சாதியத்தால் எவ்வாறு உருக்குலைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த நாகரிகப்பெயர்வு எவ்வாறு தன்னுடைய முற்போக்கு பாத்திரத்தை இப்பொழுது முற்றிலுமாக இழந்து வெறுமையாக நிற்கிறது என்பதை விளக்குவதுடன் ஒன்றன் பின் ஒன்றாகக் குழப்பத்தை தோற்றுவிக்கிறது என்பதையும் விளக்குகிறது. இந்துத்துவவாதிகள் நேரு வழியை எதிர்த்து அறைகூவல் விடுக்கும் மையக் களத்துக்கு எவ்வாறு வந்தார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள உதவும் சமூக அரசியல் பின்புலத்தையும் எடுத்துரைக்கிறது. உலகமயமாக்கலின் அவலங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இரண்டாவது நாகரிகப் பெயர்வு முற்றிலுமாக தேவைப்படுகின்றது என்பதையும், நாட்டை எதிர்நோக்கியுள்ள குழப்பம் இதனால் தீர்த்து வைக்கப்படும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
22- வாழ்விற்கும் பிழைப்பிற்கும் இடையில்
23- வேண்டாம் இந்த மருந்துகள்
24- வேண்டும் இந்த அவசிய மருந்துகள்
25- கரும்பலகைக்கு பின்னால்:- இன்றைய இந்திய கல்வி
15, பட்டியல் சாதியினர் – பழங்குடியினர் அரசியல் சாசனம் – இடஒதுக்கீடு
(புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தமிழாக்கம்)
ஆங்கிலத்தில்: நீதிநாயகம்-வி.ஆர்.கிருஷ்ணய்யர்-நீதிநாயகம்-ஓ.சின்னப்ப ரெட்டி/தமிழாக்கம்: தியாகு
பக்கங்கள் 144 . மக்கள் பதிப்பு விலை ரூ. 80
”அடிமை முறையை ஒழிக்கும் வேலை நீண்ட காலமாக நடைபெற்றுள்ளது. ரோமாபுரி அதனை ஒழித்தது அமெரிக்கா அதனை ஒழித்தது; நாமும் அதனை ஒழித்தோம். ஆனால், ஒழிக்கப்பட்டவை வார்த்தைகளே; அடிமை முறை அல்ல”. – நீதிநாயகம் – வி.ஆர்.கிருஷ்ணய்யர்
சமத்துவத்தின் பெயரால் சமத்துவத்தை மறுக்குமாறு எங்களிடம் கோரப்படுகிறது. நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது. செய்ய மாட்டோம். அவ்வாறு செய்தால் அரசியல் சாசனத்தின் ஆன்மாவுக்கும் அர்த்தத்துக்கும் குழி பறித்தவர்கள் ஆவோம். – நீதிநாயகம் – ஓ.சின்னப்ப ரெட்டி
30-Chennai Declaration for Caste Eradication
P.S.Krishnan IAS (Rtd)
Pages 256 . Price 200
This book narrates the various programs, schemes, and laws that exists for the Scheduled Castes & Scheduled Tribes but yet to be implemented or needs further enhancing and strengthening. This book will help mobilizing the democratic sections of the society towards the delivery of social justice.
31- PREVENTION OF ATROCITIES ACT: ‘ABUSE’ OR NON-USE OR INADEQUATE USE?
P. S. KRISHNAN, IAS (Retd)
Pages 102 . Price 80
India has over 180 million Dalits. A crime is committed against a Dalit every 15 minutes. Six Dalit women are raped every day. Over the last 10 years (2007-2017), there has been a 66% growth in crime against Dalits. Further, data from the National Crime Records Bureau on which the Supreme Court based its recent judgment that sought to protect public servants and private citizens from arbitrary arrests under the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989, show that the rape of Dalit women has doubled in the last 10 years. The figures represent only a tip of the iceberg since most Dalits do not register cases for fear of retaliation by higher castes. Even if a case reaches court, the most likely outcome is acquittal due to caste biases at every stage.
32. மலக்குழிக்குள் மடியலாமா மானுடம்?
33- Taking Sides – Why health care does not reach the poor
34- Rosa Remix
35- Demystifying Essays
36- Adolesence
37. தூக்கு மேடை தியாகி பாலுவின் இறுதி நாட்கள் ,ஐ.மாயாண்டிபாரதி .
38/யூனியன் கார்பைடின் நச்சுப் புயலும் நயவஞ்சக அரசியலும்,
வே. மீனாட்சிசுந்தரம், விலை ரூபாய் 50/-
39/ சமூக – பண்பாட்டு ஊழியர்களுக்கான வழிகாட்டி நூல் வரிசை – செயல் வீர்ர் கையேடு,
5 புத்தக செட் – பதிப்பாசிரியர் : த. செந்தில்பாபு,
- 1/ கலாசார நடவடிக்கைக்கான ஒரு செயல் திட்டம் – கே.என். பணிக்கர்
2/ நம்மை சூழும் அபாயத்தை எதிர்கொள்ள…….- த. செந்தில்பாபு
3/ பண்பாடும் உலகமயமாக்கமும் – அய்ஜாஸ் அகமது
4/ நாட்டார் தெய்வங்கள்- நமது நேச அணி – ச.தமிழ்ச்செல்வன்
5/ சாதியமும் சமூக மாற்றமும் – ந. இரவிந்திரன்
40/ நினைவுகள் அழிவதில்லை , நிரஞ்சனா, மொழியாக்கம் : பி.ஆர்.பரமேஸ்வரன்,
41, தீண்டாத வசந்தம், ஜி. கல்யாணராவ், மொழியாக்கம் : ஏ.ஜி. எத்திராஜுலு,
42/ ஸ்பார்ட்டகஸ் – அடிமை சமுதாய சரித்திர நாவல் , ஹோவர்டுபாஸ்ட், மொழியாக்கம்: ஏ.ஜி. எத்திராஜுலு,
43/ ஏழு தலைமுறைகள், (ROOTS) அலெக்ஸ் ஹேலி ,தமிழாக்கம் :ஏ.ஜி.எத்திராஜுலு,
44 இந்தியத் தத்துவஇயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்
45 குஜராத் இனப் படுகொலைகள் 2002 – தீஸ்தா செதால்வட்
46, பி.எஸ். தனுஷ்கோடி: ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்
47. ஆதிவாசிகள் புரட்சி – மனிதர்கள் விழிப்படையும்போது
48. இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டமும்
49. லெனினின் கல்விச் சிந்தனைகள்
50. ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கல் – பிடல் காஸ்ட்ரோ
51. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள்) தடுப்புச் சட்டம் -தமிழாக்கம் கே.கிருஷ்ணவேணி
52. இயங்கியல் முறையில் சில பயிற்சிக் கட்டுரைகள் டி.டி.கோசாம்பி
53. நவ சீனப் புரட்சியின் வரலாறு ( 1919-1956), ஹோ கான் சி, மொழியாக்கம்:சு.பாலவிநாயகம்,
54. நான் என்றும் மக்கள் ஊழியனே , ஏ.கே. கோபாலன், மொழியாக்கம்: சி.ஏ.பாலன்,
55. குற்றப் பரம்பரை இழிவு சுமத்தப்பட்ட மக்கள் வாழ்வு: முன்னும் பின்னும் – பேராசிரியர் மல்லி காந்தி – தமிழாக்கம் – த.நீதிராஜன்
56.டாக்டர் நார்மன் பெத்யூன் கதை – தமிழாக்கம் – சொ.பிரபாகரன்
பணம்அனுப்ப:
SOUTH VISION BOOKS,
DENA BANK,
T.NAGAR BRANCH,
CURRENT ACCOUNT NUMBER – 051211023958,
IFSC NUMBER – BKDN0620512
பணம்அனுப்பியவிவரத்தையும், உங்களின்முகவரி, மின்னஞ்சல், தொலைபேசிஎண்களையும்தங்களின்விருப்பத்துக்குஏற்ப, கடிதம், மின்னஞ்சல், வாட்சப்உள்ளிட்டவகைகளில்தெரியப்படுத்தவேண்டும்.
சவுத் விஷன் புக்ஸ்
491-B, G1- ஒமேகா பிளாட்ஸ், நான்காம் இணைப்பு சாலை, சதாசிவ நகர்,
மடிப்பாக்கம், சென்னை- 600 091


Leave a comment