Don’t mourn, organize!

From Wikipedia, the free encyclopedia

The cover of the compilation album which uses the phrase

“Don’t mourn, organize!” is an expression, abridged from a statement by labor activist and songwriter Joe Hill near the time of his death. Hill wrote the full statement in a telegram he sent to Bill Haywood, which stated, “Goodbye, Bill, I die like a true blue rebel. Don’t waste any time mourning. Organize!” Hill followed that telegram with another: “Could you arrange to have my body hauled to the state line to be buried? I don’t want to be found dead in Utah.”[1] In 1915, Hill was convicted and executed for the murder of John and Arling Morrison a year prior; he denied having committed the murders but, for reasons that remain a source of speculation, was unwilling to give an alibi during his trial.

Since the death of Hill, the phrase has been used both in association with other labour leaders’ deaths and on the occasion of severe defeats. It is particularly popular within the Industrial Workers of the World.

The phrase is popular enough in its association with Joe Hill and the labour movement that it was the title of a music compilation made in 1990 and released by Smithsonian Folkways. The full title is Don’t Mourn — Organize!: Songs of Labor Songwriter Joe Hill.

In 2010, after the death of Howard Zinn, a Boston Globe article was titled with this phrase.[2]

In 2017, activists used the phrase to motivate protest against President Donald Trump and his administration.[3][4][5]

References[edit]

  1. ^ Roughneck: The Life and Times of Big Bill Haywood, Peter Carlson, 1983, pp. 235.
  2. ^ “Zinn: Don’t mourn, organize!”. The Boston Globe. January 29, 2010. Archived from the original on 2018-12-03. Retrieved 2011-09-14.
  3. ^ Steinem, Gloria (10 November 2016). “After the election of Donald Trump, we will not mourn. We will organize”The Guardian. Retrieved 19 May 2019.
  4. ^ Ford, Kieran. “Don’t mourn, organize! Three ways millennials can build a better post-Trump future”Open Democracy. Retrieved 19 May 2019.
  5. ^ Bauer, Andrea. “Don’t mourn, organize! Donald J. Trump and the year of voting dangerously”Freedom Socialist Party. Retrieved 19 May 2019.

ஜோ ஹில்

துயரப்பட வேண்டாம், ஏற்பாடு செய்யுங்கள்!

இப்படிக்கு,

ஜோ ஹில்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் யூட்டா மாநில அரசால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தொழிலாளர்களின் பாடகர் ஜோ ஹில் எழுதிய இரண்டு கடிதங்கள்.

நூறு ஆண்டுக்கு முன்பு, இதே நாளில் யூனியன் அமைப்பாளரும், பாடலாசிரியருமான ஜோ ஹில்லுக்கு யூட்டா மாநில அரசு மரண தண்டனையை நிறைவேற்றியது.  “தேர் இஸ் பவர் இன் எ யூனியன்”, “கேசி ஜோன்ஸ் – யூனியன் ஸ்கேப்” போன்ற பாடல்களை வழங்கிய ஜோ ஹில்லை அன்று மௌனமாக்கியது யூட்டா மாநிலம்.

ஜோயல் ஹாக்லண்ட்  1879 இல் ஸ்வீடிஷ் பெற்றோருக்கு மகனாக பிறந்தார். தொழிலாளர் பேரணிகளிலும், மறியல் போராட்டங்களிலும், அவர் பிரதானமானவராக திகழ்ந்தார். அந்த போராட்டங்களில், உலக தொழிலாளர்களின் பாடல் தொகுப்பான “(Little Red Songbook) லிட்டில் ரெட் பாடல் புத்தகத்தில்”உள்ள பாடல்களை உரக்கப் பாடினார்.1914 ஆம் ஆண்டில், ஒரு சந்தேகத்திற்குரிய விசாரணைக்குப் பிறகு, ஒரு மளிகைக் கடைக்காரரையும் அவரது மகனையும் கொலை செய்ததாக ஹில் குற்றம் சாட்டப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட வலுவான பிரச்சாரங்கள் தோல்வியடைந்தது. மூன்று துப்பாக்கி தோட்டாக்கள் ஹில்லின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தன. ஆயினும், அந்த தோட்டாக்கள் அவரது நிலையை தொழிலாளர் இயக்கத்தின் சின்னமாக உயர்த்தி உறுதிப்படுத்தின.

பின்வரும் கடிதங்கள்- ஹில் உட்டா(Utah) சிறையில் இருந்தபோது அனுப்பப்பட்டது. ஹேமார்க்கெட் புக்ஸ், வெளியிட்ட(newly released collection) அவரது கடித தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. அக்கடிதங்களில் அவர் தொழிற்சங்க பாடல்களை எழுதுவதற்கான தனது உந்துதலை விளக்குகிறார். பெண் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க தொழிலாளர் சங்கங்களை வலியுறுத்துகிறார், மேலும் அவரது இறுதி விருப்பங்களை சுருக்கமாக கோடிட்டுக் காட்டுகிறார்.

*****

நவம்பர் 29, 1914

ஆசிரியர், பொறுப்பு:

நீங்கள் பாடல் புத்தகத்தின் மறு பதிப்பை வெளியிடப் போகிறீர்கள் என்பதை “Sol” இல் பார்த்து அறிந்து கொண்டேன்.  நான் பாடல்களில்  சில மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்துள்ளேன், அதை நான் இத்துடன் இணைக்கிறேன்.

தொழிலாளர் அமைப்பினுள் கேளிக்கைகளுக்கும், பாடல்களுக்கு இடமில்லை என்று வாதிட்ட பல முக்கிய கிளர்ச்சியாளர்களைப் பற்றி நான் இப்போது நன்கு அறிவேன். தொழிலாளர் ஒற்றுமைக்கு பாடல்கள்   மட்டுமே அடிப்படை காரணமாக அமைவதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்; வர்க்கப் போராட்டம் என்பது மிகவும் தீவிரமான விஷயம் என்பதை நான் உணர்ந்துள்ளேன், ஆனாலும் நான் என்னுடைய முட்டாள் தனமான புரட்சிகர  பாடல்களை மேலும், மேலும் உருவாக்க எண்ணுகிறேன்.

ஒரு துண்டுப் பிரசுரம், எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அது ஒருமுறைக்கு மேல் வாசிக்கப்படுவதில்லை, ஆனால் ஒரு பாடல் மக்கள் மனதுக்குள் நுழைந்து, பதிந்து விடுகிறது, அதனால் அது  மீண்டும் மீண்டும் பாடப்படுகிறது; ஒரு பாடலில் எளிமையான, பொது அறிவு உண்மைகளை இணைத்து, நகைச்சுவை எனும் உடை அணிவித்து, வறட்சியான பகுதிகளை நீக்கி, பாமர மொழியில் இயற்ற தெரிந்த ஒருவனால், பல தொழிலாளர்களின் மனதுக்குள் நுழைய முடியும். பொருளாதார அறிவியல் பேசும் துண்டு பிரசுரங்களையோ, தலையங்களையோ படிக்கும் அளவுக்கு கல்வி கற்காதவர்களையும், படிக்க நேரம் இல்லாதவர்களையும், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத அலட்சியமான தொழிலாளர்களையும்   இது போன்ற பாடல்கள் சென்றடையும். அவர்களுக்குள் மாற்றத்தை நோக்கிய ஒரு வர்க்க பார்வையை ஏற்ப்படுத்தும்.

பழைய உறுப்பினர்களை தக்க வைத்துக் கொள்ளவும், வர்க்கப் போராட்டத்தில் ஆர்வம் உள்ள புது உறுப்பினர்களை கவர்ந்திழுக்கவும் ஒரு விஷயம் அவசியம், அது தான் பொழுதுபோக்கு. ஸ்வீடனின் கிளர்ச்சியாளர்கள் அந்த உண்மையை உணர்ந்துள்ளனர்,  அவர்கள் ஒவ்வொரு வாரமும் இம்முறையிலான சங்க கூட்டங்களை கூட்டுவதை தங்களின்  வழக்கமாக கொண்டுள்ளனர். அதன் காரணமாக உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட பெண் தொழிலாளர்களை அதிக அளவில் சங்கத்தில் இணைப்பதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக யுனைடெட் ஸ்டேட்ஸில், குறிப்பாக மேற்கு பகுதிகளில் பெண் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதன் விளைவாகவே நாம் இங்கு  வினோதமான ஒரு கால் விலங்கை போன்ற தொரு தொழிற்சங்கத்தை உருவாக்கியுள்ளோம். நமது நடனங்களிலும், கேளிக்கைகளிலும் ஆணுக்கான அதிகாரமும், பங்களிப்பும் அதிகமாக உள்ளது.இது நமது தொன்மையான இயற்கைக்கு மாறானது. பெண்களின் சம பங்களிப்பின்றி உயிர்ப்புள்ள அமைப்பை உருவாக்க இயலாது.

ஆண், பெண் தொழிலாளர்களுக்கு இடையே சமூக உணர்வுடன் கூடிய ஒரு வகையான நல்ல நட்புறவினை ஏற்படுத்துவதே இதன் யோசனை. இது அவர்களுக்கு எதிர்காலத்தில் அமையப் போகும் நமது சமத்துவம் நிறைந்த சமுதாயத்தைப் போன்றதொரு உணர்வை கொடுக்கும். அந்த உணர்வு வர்க்கப் போராட்டத்தை நோக்கிய அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதோடு, இப்போதுள்ள பழமையான ஊழல் முறையை அகற்றுவதில் அவர்களுடைய பங்களிப்பை அதிகரிக்கும். உதாரணமாக, பெண் தொழிலாளர்கள் மத்தியில் வலுவான அமைப்பைக் கட்டியெழுப்புவதற்காக எங்கள் பெண் அமைப்பாளர்களான குர்லி ஃப்ளைனைப் பயன்படுத்துவது மிகவும் நல்ல யோசனையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆண் தொழிலாளர்களை விட பெண் தொழிலாளர்களே அதிகமாக சுரண்டப்படுகிறார்கள். போர்க்குணத்திலும், புரட்சிகர மனப்பான்மையிலும் ஆண்களை விட பெண்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை சான்றுகளுடன் எடுத்துக் கூற ஜான் புல் தயாராக உள்ளார்.

நமது ஸ்வீடிஷ் நாட்டின்  சக ஊழியர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, சங்க நடவடிக்கைகளில் வரட்சியற்ற மக்கள் கலையை பயன்படுத்த வேண்டும். பொழுதுபோக்கிற்கு இடமளிக்கும் சமூக உணர்வுடன் கூடிய பாடல்களும், படங்களும் இளைய சமூகத்தின் மனதில் ஈர்ப்பை உருவாக்கும்.பாலின வேறுபாடின்றி இளைய தலைமுறையை நமது யூனியனை நோக்கி ஈர்ப்பதற்கு கலை நமக்கு பெரிதும்  பயன்படும்.

மாற்றத்தை விரும்பும் உங்களின்,

ஜோ ஹில்

முகவரி: ஜோஸ். ஹில்ஸ்ட்ரோம், கோ. ஜெயில், சால்ட் லேக் சிட்டி, உட்டா.

****

நவம்பர் 18, 1915

டபிள்யூ. டி. ஹேவுட்

சிகாகோ, இல்லினாய்ஸ்

சென்று வருகிறேன் பில்: நான் ஒரு உண்மையான கிளர்ச்சியாளரைப் போல இறக்கிறேன். துக்கத்தில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் – ஏற்பாடு செய்யுங்கள்! இங்கிருந்து வயோமிங் நூறு மைல் தொலைவில் உள்ளது. எனது உடலை மாநில எல்லைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய முடியுமா? நான் உட்டாவில் இறந்து கிடக்க விரும்பவில்லை.

-ஜோ ஹில்

Posted in Articles(கட்டுரைகள்)

Leave a comment