There is one thing stronger than all the armies in the world: and that is an idea whose time has come.
-Victor Hugo
மொழிபெயர்ப்புப் பணி ஓர் இயந்திரகதியான வேலை; அதற்கு கிரியேடிவிட்டி கிடையாது என்ற தவறான புரிதல் இங்கு மிகப் பெரும்பாலோருக்கு உள்ளது. உண்மையில் நூலாசிரியரின் சிந்தனை, உணர்வு மற்றும் அந்தப் படைப்பைப் புரிந்து தங்கள் மொழிக்கு மாற்றி அதைப் படைப்பது மிக முக்கியமான படைப்பாற்றல் பணி, கிரியேட்டிவிட்டி, கடினமான உழைப்புச் சுமை ஆகியவற்றைக் கொண்டது. மேற்கூறிய தவறான புரிதலாற்தான் இன்று வரை மொழியாக்கப் பணியில் ஈடுபட்டவர்களை, ஈடுபடுபவர்களை நமது சமூகம் கௌரவிக்க முயற்சி செய்ததில்லை. அவர்களைப் போற்றி மகிழ்வதில்லை, நினைவு கூர்ந்து நன்றி அறிவிப்பதில்லை.
ஒரு படைப்பை தமிழில் தரவேண்டும் என்ற உந்துதல் மிக உயர்ந்த சமூக அரசியல் உணர்விலிருந்து, சிந்தனையிலிருந்து பிறப்பெடுத்து வளர்கிறது; உருப்பெறுகிறது. அந்த ஊற்றை வற்றவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் சமூகத்தின் பொறுப்பு. அந்த வகையில் தோழர் ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் பங்களிப்பு மிகமுக்கியமானது. காலத்தின் தேவையைப் பிரதிபலித்தவர், போற்றிப் பாராட்டப்பட வேண்டியவர்.
தமிழுக்குப் பலர் அவ்வப்போது பல முக்கியமான படைப்புகளை தந்துள்ளனர். எமது நிறுவனம் வெளியிட்ட சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.1940களில் இஸ்மத் பாஷா தந்த ‘சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் சுருக்கமான வரலாறு” 1970-90களில் தந்த ‘நவசீனப் புரட்சியின்சு.பாலவிநாயகம்வரலாறு”,
பி.ஆர்.பரமேஸ்வரன் வழங்கிய ‘நிளைவுகள் அழிவதில்லை, ஜானகி ராமச்சந்திரனின் ‘மனிதர்கள் விழிப்படையும்போது, ஏ.ஜி.எத்திராஜுலுவின் ‘ஸ்பார்ட்டகஸ்’ ‘ஏழு தலைமுறைகள், பிசுந்தரய்யாவின் ‘புரட்சிப்பாதையில் எனது பயணம்,
2004ல் ‘தீண்டாத வாந்தம், 2006-ல் சொபிரபாகரன் படைத்த ‘டாக்டர் நார்மன் பெத்யூன் கதை: ஒரு சர்வதேசியப் போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும்:– இந்தப் பட்டியல் முழுமையானதில்லை என்பதை அனைவரும்அறிவர். சோவியத் ரஷ்ய – சீன படைப்புகளை தமிழுக்குத் தந்தவர்கள். ஏராளம். அதுமட்டுமல்ல, சமீபத்தில் விடியல் பதிப்பகம், அலைகள் வெளியீட்டகம், பாரதி புத்தகாலயம் போன்ற முற்போக்கு நிறுவனங்கள் உள்ளிட்ட பல வெளிக்கொணர்ந்த காத்திரமான மொழிபெயர்ப்புப் படைப்புகள் தமிழை சிறப்பிக்கின்றன.
உங்கள் கரங்களில் தவழுகின்ற இந்நூல் தோழா கோதாவரி பாருலேகர் அவர்களால் மராத்தி மொழியில் இயற்றப்பட்டு வெளியானது. தமிழில் முதலில் 1987ஆம் ஆண்டு தோழர் ஜானகி ராமச்சந்திரன் அவர்களால் மலையாளத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிட்டோம். ‘மனுஷ்யன் உணரும்போல்” (Manuashyamunarumpol: மலையாள மொழியாக்கம் கலியாத் தாமோதரன், சிந்தா பப்ளிஷர்ஸ், திருவனந்தபுரம்) என்கிற தலைப்பில் வெளியானது. அதற்குமுன் மராத்தியிலிருந்து திருமதி சாந்தா சஹானேவும் தோழர் லீலா சுந்தரய்யாவும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து 1975இல் Adivasis Revolt: The Story of Warli Peasants in Struggle armi National Book Agency, Calcutta நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு மொழியாக்கமும் அந்தந்தக் காலத்தின் வெளிப்பாடு தமிழில் முதல் பதிப்பு வெளிவந்து 20 வருடங்களுக்கு மேல் உருண்டோடி விட்டன. நூலாசிரியர் தோழர் கோதாவரி பாருலேகர் காலத்திலேயே அவருடன் கலந்துபேசி ஆங்கில மொழிபெயர்ப் பாளர்கள் ஆங்கிலப் பதிப்பை செழிப்பூட்டி உள்ளதை ஆங்கிலத்தில் வாசிக்கும்போது உணரமுடிந்தது. 2000த்தில் மறுபதிப்பு செய்ய முடிவு செய்தபோது ஆங்கிலத்திலிருந்து புதிய மொழிப்படைப்பைச் செய்ய முடிவு செய்தோம். தோழர் கமலாலயன் அந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்து தந்துள்ளார்.
கோதாவரி பாருலேகரின் பிறந்த நூற்றாண்டை ஒட்டி தோழர் அசோக் தாவ்லே எழுதிய “Godavari Paruleker: ACentenary Tribute” கட்டுரை ‘The Marxist XXII! October – December 2007இல் வெளிவந்தது. இக்கட்டுரை கோதாவரி பாருலேகர் வாழ்க்கை, அவரது போராட்டப் பாதை, இந்திய விவசாயிகளின் எழுச்சிப் பேராட்டங்கள்
VI
முறியும். இதுவரை நாம் அறியாத பல அரிய தகவல்களையும் விரிவாக விவரிக்கிறது. இதையே புதிய இரண்டாம் பதிப்பிற்கு அணிந்துரையாகச் சமர்ப்பிக்கிறேன். இதைத் தோழர் சொயிரபாகர அவர்கள் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
இந்நூல் உருவாக்கத்தில் மிகமுக்கிய பங்காற்றியவர்களை இங்ே குறிப்பிடாமல் இருக்கமுடியாது. கமலாலயன், சொ.பிரபாகரன் ந.இரவீந்திரன், ஜி.செல்வா ஆகியோருடன் சூரியசந்திரன் ஜேயாலாஜிக்கும் எமது வாழ்த்துக்கள்
பின்னாட்களில் கோதாவரி பாருலேகருக்குப் பல விருதுகள் வந்து சிறப்பித்தன. இந்த நூலுக்காக சாகித்ய அகாதமி பரிசும் ஜவகர்லால் நேரு விருது மற்றும் சோவியத் நாடு விருதுப் வழங்கப்பட்டன. அடிமட்ட மக்களுக்காகச் சேவை புரிந்த அவரின் இன்னலமற்ற பொதுவாழ்க்கைக்காக ‘லோகமான்ய திலகர்’ விருதும் க சமத்துவத்திற்கான அவரின் உழைப்பிற்காகவும் பெண்விடுதலைக்காக அவரின் பங்களிப்பிற்காகவும் ‘சாவித்திரிபாய் பூலே’ விருதையும் அவர் பெற்றார்.
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புற்ற வர்க்கமாக அணிதிரண்டு போராடிய வரலாற்றை நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள். இந்நூல், ‘தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்’ 5ஆவது மாநில மாநாட்டில் வெளியிடப்படுவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அரசியல் இயக்கமும் வெகுஜன இயக்கங்களும் இந்நூலை தன் மார்பில் அரவணைத்து மக்கள் முன் எடுத்துச் செல்லப் போகிறதா? இல்லை. மானுடவியல், வரலாற்றியல் சமூகவியல், இலக்கியத் துறை ஆராய்ச்சிக்கு மட்டும் பயன்படும்படி விட்டுவிடப் போகிறதா? இதற்கான விடையை நம் வருங்கால வாலாறுதான் எடுத்துரைக்கும்.
வாசியுங்கள். வாசிக்கப் பலருக்குக் கொடுங்கள், வரலாற்றைப் பயிலுங்கள் பயில்வதற்கு மற்றவர்களுக்கு உதவிடுங்கள். மௌனத்தில் சிக்கித் தவிக்கும் வரலாற்றை உரக்கப் பேசிடப் புறப்படுவோம் பாடுபடுவோம்.
15.09.08
எம்.பாலாஜி
| ReplyForwardAdd reaction |


Leave a comment