ஏகாதிபத்தியம், சுய நிர்ணய உரிமை மக்கள்இலக்கியம் – ந. இரவீந்திரன்

வாசிப்போரின் மனசாட்சியை உலுக்கும் ஒரு புத்தகம்
கலாநிதி ந. இரவீந்திரன் எழுதிய ஏகாதிபத்தியம், சுய நிர்ணய உரிமை மக்கள்
இலக்கியம் என்ற நூலை தோழர் நீதிராஜன் மூலம் பெற்றேன், அவருக்கு நன்றி.
இன்று தொண்மையின் சிறப்பில் மயங்கி.எதிரதாக் காக்கும் அறிவில்லாமல் கிடக்கும்
தமிழ் கூர் அறிவுலகத்தை உலுக்கிவிட இப்புத்தகம் உதவுமென உணர்கிறேன். ,இந்
நூலின் சிறப்பை உணர இதை எழுதிய பேராசிரியர் இரவீந்தரனை பற்றி தெறிந்து
கொள்ள வேண்டும். இலங்கையின் யாழ்பாணத்துவாசி,1952ல் பிறந்தார். பேரானை
பல்கலைகழகத்தில் முதுகலைமாணிப்பட்டத்தையும் .சென்னைப் பல்கலைகழகத்தில்
பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்களின் நெறிப்படுத்துகையில் ‘திருக்குறளின் கல்விச்
சிந்தனை’ எனும் பொருளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.
புத்தக அறிவும் இரு மருங்கிலும் வாழ்ந்த அணுபவ அறிவும் கொண்டு இந் நூலை
எழுதியதால் தமிழ் கூர் உலகத்தின் வாசிப்பிற்கும் பரந்த உரையாடலுக்கும் ஏற்ற
புத்தகமாக உள்ளது. வாசிப்போரின் மனச்சாடசியை உலுக்கிவிடுகிறது.
இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் பரவலாக விவாதிக்கப்படும்
தேசியம்,அடையாள அரசியல், வர்க்க வேறுபாடு, சாதியம். இலக்கிய போக்குகள்
இவைகளை மார்க்சியவழியில் இந்த புத்தகம் உரையாடுகிறது. இவைகளைப் பற்றி
மார்க்சிய ஆசான்கள் என்ன சொல்கிறார்கள் என்று தேடாமல் அவர்கள் பின்பற்றிய
வரலாற்று செல் நெறிவழியில் இப்புத்தகம் வாசகனோடு வாதிக்கிறது
இலங்கை தமிழ் தேசியம் இந்திய தமிழ் தேசியம் இரண்டின் தவறான பார்வையை
துணிந்து விமர்சிக்கிறது. ஆங்கில மோகம், ஆண்ட பரம்பரை என்ற இரண்டு அரசியல்
முடக்குவாதங்களால் ஏற்பட்ட பாதிப்பை உணரவைக்கிறது.
ஆண்டபரம்பரை என்ற பார்வை கொண்ட அரசியலை திணை அரசியல் என்று
குறிப்பிட்டு தமிழ் மண்ணில் சோழ, பாண்டிய.சேர மண்ணர்காலத்து வரலாற்று மூலத்தை
தொட்டு எழுதுகிறார். தினை அரசியல் ஆதிக்க மண்டலங்களை உருவாக்க போராடுகிறது
என்கிறார் அடையாள அரசியலும் சாதியம்சார்பு அரசியலும் திணை அரசியலின்
வகையே, ஆதிக்க மண்டலத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டவை என்பதை
ஆதாரங்களுடன் பதிவு செய்கிறார். வர்க்க அரசியலே ஜனநாயகத்தை இலக்காக
கொண்டது என்பதை உணர்த்திவிடுகிறார்
ஏகாதிபத்திய திணை அரசியல், சந்தைமூலம் ஆதிக்க மண்டலங்களை உருவாக்குவதற்கு
மாற்றாக சீனா மார்க்சிய வழியில் அதே சந்தை மூலம் தானும் வளர்ந்து பின்தங்கிய
நாடுகளையும் சுதந்திரமாக வாழ உதவுகிறது. ஏகாதிபத்திய தினை அரசியலோ

சந்தையை பொருளாதார தடை மூலம் முடக்கி தனது ஆதிக்கத்தை நிலை
நிறுத்தபார்க்கிறது.
உலக சந்தை அமைப்பு சரக்கு உற்பத்திகளை சங்கிலி போல் நாடுகளை
இணைத்துவிட்டதால் அது பின்னிய விலையில் அதுவே மாட்டிக் கொண்டது என்பதை
உணர்த்தி விடுகிறார்
நிறைவாக இன்றைய சூழலில் தனி மனிதனை மேன்மைபடுத்தும் மக்கள் இலக்கிய
இயக்கம் தேவை என்பதை தமிழ் கூர் உலகின் இங்கே பாரதி, அங்கே மகாகவி தொடங்கி
பல இலக்கிய போக்குகளின் நிறை குறைகளை அலசி வரலாற்று நெறியோடு
நேர்த்தியாக பதிவு செய்கிறது..மார்க்சியவாதிகள் மட்டுமல்ல தமிழ் கூர் அறிவுலகம் இதை
வாசித்து விவாதிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கும் சமூக அமைதிக்கும் அவசியம்
புத்தகம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள நீதிராஜன் சவுத்விஷன் புக்ஸ் +91
9445318520

Leave a comment