Neethirajan
மூலவர்கள்
கூறுவதென்ன?

இந்திய சமூகம் “மனித இன வளர்ச்சியின் உயிருள்ள காட்சி சாலையாக” உள்ளது என்கிறார் டாக்டர் அம்பேத்கர். மிக உயர்வான கல்வி கற்ற பணக்கார வர்க்கம் முதல் ஆதிவாசிகள் வரை பலதரப்பட்ட குழுக்கள் இங்கே உண்டு. மனித இனம் கடந்து வருகிற பல்வேறு பொருளாதார கால கட்டங்களில் இவர்கள் வாழ்கிறார்கள். இந்தியா ஜாதி படிக்கட்டு சமுதாயத்திலிருந்து, நவீன பொருள் உற்பத்தி சமுதாயமாக மாறிவரும் கட்டத்திலிருக்கிறது.
பல்வேறு பொருளாதார காலகட்ட வாழ்நிலைகளில் வாழும் மக்களிடையே தேவையான அளவு மார்க்சியக் கருத்துகள் சென்றடைய வில்லை. இதனால் தமது மனதில் ஏற்கெனவே உள்ள சாதி, மதம் உள்ளிட்ட வழிகளில் தம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் முயல்கின்றனர். அனுபவங்களை கற்றுக் கொள்கின்றனர் மீண்டும் வளர்ச்சியை நோக்கி முன்னேறுகின்றனர்.
“நவீன தொழில் உற்பத்தி புகுவதால் ஏற்படும் வர்க்கப் பாகுபாட்டால் ஏற்படும் உணர்வையே இந்திய சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும்” என்பதும் “வர்க்கங்களிடையே ஒற்றுமை உணர்வும், இணக்கமும் இருக்க வேண்டும்” என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தத்துவமாகும். அதன் தலைவர் கோல்வால்கர் தமது “ஞானகங்கை” நூலில் இதைக் கூறுகிறார்.
இந்திய சமூகம் சாதீயப் படிக்கட்டுகளாய் நீடித்திட ஒவ்வொரு படிக்கட்டிலும் உள்ள மக்களுக்கு சில பொருளாதாரக் கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது.
இஸ்லாமிய மற்றும் ஆங்கிலேய படையெடுப்பாளர்களை எதிர்த்துப் போராடி சொத்துக்களை இழந்து காடுகளுக்கு ஓடிய வீரர்களின் வாரிசுகள்தாள் ஆதிவாசிகள் என்கிறது ஆர்.எஸ்.எஸ் (அதனால் அவர்கள் வனவாசிகள் மட்டும்தான் ஆதிவாசிகள் அல்ல) ஆர்.எஸ்.எஸ். விளக்கப்படி. ஜாதிகள் அடுக்கு என்பது இந்த சமூகத்தின் பிரிக்க முடியாத அம்சம், ஒவ்வொரு சாதிக்கும் உள்ள கடமையும், உரிமையை வரையறை செய்யப்படுவதே தர்மமாகும் என்பதே.
ஏற்றத் தாழ்வு என்பது இயற்கையின் பிரிக்க முடியாத அம்சம். அதனுடன் ஒத்துப் போக வேண்டும். ஏற்றத் தாழ்வை வரம்புக்குட்படுத்த வேண்டும். அதனால் ஏற்படும் கசிப்பு உணர்வைத்தான் மக்களிடம் இருந்து போக்க பாடுபட வேண்டும் என்கிறார். ஆர்.எஸ்.எஸ்.சின் இரண்டாவது தலைவர் கோல்வால்கர்.
“தீண்டாமை என்பது வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றப்பட வேண்டும்” என்று மூன்றாவது ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ் அறிவித்தார். இந்துமத சாமியார்களையும் அவ்வாறு அறிவிக்கச் செய்ய ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. தலித், ஹரிஜன் என்ற தனிப்பெயர்களே கூடாது. இந்து என்ற பெயர் மட்டும் இருக்க வேண்டும். தலித்துகளுக்கு பொருளாதார, அரசியல் சமத்துவம் தருவது என்பது உண்மையான மாற்றம் அல்ல. எழுத்தறிவு, சுகாதாரம் ஆகியவற்றை அவர்களுக்கு தரவேண்டும் அதோடு பக்தியை வளர்க்க பஜனைகளை நடத்த வேண்டும்”
“முதலாளிகள் ஆதிக்க உணர்வை கைவிட வேண்டும். அன்பாக தொழிலாளிகளிடம் கலந்து பழக வேண்டும். தமது எஸ்டேட்டில் கோயில்களை கட்ட வேண்டும் வர்க்கப் போராட்டம் இன்றியமை யாதது என்பது மார்க்சியம். இது பலாத்கார, குழப்பமான கோட்பாடு பாரதிய கண்ணோட்டம் சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தை விலக்கி விடுகிறது.” என்றும் கோல்வால்கர் சொல்கிறார்.
சாதி அடுக்குகளை நிரந்தரமாக்கும் தத்துவம்
இவையே ஆர்.எஸ்.எஸ். இந்திய மக்கள் முன்வைக்கும் சமத்துவம் மற்றும் மானுட உறவு பற்றிய கோட்பாடாகும்.
“தமது பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள போராடும் இந்திய மக்களுக்கு இந்தத் தீர்வுகள் போதுமானதல்ல உடல் உறுப்புகளால் கிடைக்கும் இன்பத்தால் ஆசை அடங்குவதில்லை. சந்தோஷ உணர்வு உள்ளேயே இருக்கிறது. மனம் அமைதி அடைந்தால் பொருள் இல்லாது இன்பம் கிடைக்கும் தன்நிலையில் திருப்தி அடைய வேண்டும். பிறர் சுபிட்சமாக விளங்குவது கண்டு பொறாமை கூடாது. மகிழ வேண்டும் என்கிறார் கோல்வால்கர் (ஞானகங்கை முதல் பாகம்) இந்தக் கருத்துக்கள் சுரண்டும் வர்க்கங்கள் எதுவானாலும் அவர்களுக்கு சேவை செய்கின்றன என்பதை எடுத்துச் சொல்ல
வேண்டியதில்லை.
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு இந்திய நாட்டின் தொண்மையான கலாச்சாரத்தை பின்பற்றுவதாகக் கூறுவது இன்னொரு மோசடி எது தொண்மையான கலாச்சாரம் என்ற கேள்விக்கு அவர்களிடம் தெளிவான பதில் கிடையாது. இங்கு எல்லாவிதமான கருத்துக்களும் ஆதிகாலத்தி லிருந்தே மோதி வருகின்றன. சமத்துவக் கருத்துக்களும், ஏற்றத் தாழ்வை நில நாட்ட முயலும் ஆதிக்க சக்திகளின் கருத்துக்களும் மோதி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் ஆதிக்க சக்திகளின் தத்துவங்களை முன்வைக்கின்றன. அதனை எதிர்க்கும் பாரம்பரியமும் இங்கே உண்டு. அதன் தொடர்ச்சிதான் நாம் நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்த்த தத்துவ போராகும்.
ஆர்.எஸ்.எஸ். எனும் மாயை
ராஷ்ட்ரிய கயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்றால் தேசிய தொண்டர் களின் சங்கம் என்று தமிழில் அர்த்தம். ராஷ்ட்ரீய என்பது மராத்தி சொல்
ஆர்.எஸ்.எஸ். இன் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவர் ஒரு மகாராஷ்டிர பிராமணர். முதல் உலகப் போரின் போது அவர் வடஇந்தியாவில் சில ஆயுதந் தாங்கிய குழுக்களில் பணியாற்றினார். பிறகு காங்கிரசின் தொண்டர்அணியிலும் பணியாற்றியுள்ளார். இந்து மகாசபை எனும் மதவெறிக் கட்சியிலும் இருந்தார். இந்த அனுபவங்களை இணைத்து அவர் ஆர்.எஸ்.எஸ். நிறுவினார். மகாராஷ்டிராவில் 1925 செப்டம்பர் 27ல் ஆர்.எஸ்.எஸ். துவங்கியது. துவங்கிய ஆறு மாதத்திற்குப் பிறகு தான் பெயர் வைக்கப்பட்டது. முதலில் உடற்பயிற்சிக் கூடங்களில் இளைஞர்கள் திரட்டப்பட்டனர். அவர்களுக்கு ராணுவப் பயிற்சி தரப்பட்டது. பிறகு மதவெறிக் கல்வி தரப்பட்டது உடற்பயிற்சி, படைப்பயிற்சி, மதவெறிக் கல்வி தவித்தனி நாட்களில் வேறு வேறு இடங்களில் முதலில் நடந்தன. 1926 மே மாதத்தில் இவை ஒன்றாக இணைக்கப்பட்டு முதல் ஷாகா உருவாக்கப்பட்டது. தினசரி சந்திப்பு அவசியமாக்கப்பட்டது.
துவக்கப்பட்ட போது எவ்வித எழுத்துப்பூர்வ விதிமுறையும் இல்லை. நான்கு வருடம் கழிந்துதான் சர் சங்க் சாலக் எனும் உயர் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. முதலில் மாதச் சந்தா முறை இருந்தது பிறகு ஆண்டுக்கு ஒருமுறை குரு தட்சிணை செலுத்தும் முறை உருவானது. காவிக் கொடிதான் குரு 15 வருட காலத்திற்குள் படிப்படியாக சங்கப் பிரார்த்தனைப் பாடல் ஆறு விதமான விழாக்கள், சமஸ்கிருத உடற்பயிற்சிக் கட்டளை சொற்கள் உருவாக்கப்பட்டன. சுமார் 20 ஆண்டு காலம் ஷாகாக்கள் எனப்படும் கிளைகளை உருவாக்கும் பணி மட்டுமே நடத்துள்ளது.
ஷாகாக்களில் “நாடு பிடிக்கும் விளையாட்டு” உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் உள்ளன. வன்முறையைப் பயன்படுத்துவதற்கான உடற் பயிற்சிகள் உள்ளன. தியானம், யோகம், உள்ளிட்ட இந்திய மரபுப் பயிற்சிகளும் உள்ளன. அதோடு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களிடையே ‘குழு’உணர்வை வளர்க்கும் பல விதத் திட்டமிட்ட ஏற்பாடுகள் அதில் உள்ளன.
ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பயின்றவர்கள் சுயம் சேவக்குகள் (தாளாக முன் வந்து தொண்டு செய்பவர்) எனப்படுகிறார்கள். ஷாகாக்களில் மூன்று ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் அவரவர்களின் சொந்த மாநிலங்களில், மூன்றாம் ஆண்டு பயிற்சி ஆர்.எஸ்.எஸ். தலைமை பீடத்தில்தான் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அது உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். உள்கட்டமைப்பு பெரும்பாலும் ஒரு ஆயுதம் தரித்த குழுவிற்கான பயிற்சித் தன்மையாகவே துவங்கியது. இப்போதும் அப்படியே தொடர்கிறது. ஆர்.எஸ்.எஸ்.சை முதலில் துவக்கிய ஐவரில் ஒருவர் டாக்டர் மூஞ்சே. அவர் இத்தாலி சென்று பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். ஆலோசித்தார். பாசிஸ்ட்டுகளை காப்பியடித்துதான் ஆர்.எஸ்.எஸ். சீருடை உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.
தனது 50வது வயதில் 1940ல் ஹெட்கோவர் இறந்தார். அந்த டாக்டர் ஒருபோதும் யாருக்கும் வைத்தியம் பார்த்ததில்லை. வாழ்நாள் முழுவதும் மதவெறி நோயைத்தான் பரப்பினார். அவர்தான் 1939ல் தாதாராவ் பரமார்த் என்பவரை சென்னைக்கு அனுப்பினார் முதல் ஷாகா துவக்கப்பட்டது.
அதன் பிறகு பல முழுநேர ஊழியர்கள் அனுப்பப்பட்டனர். விட்டோபா பென், டார்க்கர், அண்ணா சேவக், சிவராம்ஜி ஜோக்லேகர், விஷ்ணு மெயின்கர், ஸ்ரீராம் மாலோதே, தத்தோபந்த் தெங்கடி, மனோகர்தேவ், தினகர் புச்சே, ஜகதீஷ் அப்ரோல், நாகநாத்காளே. பாபாராவ் தேஷ்பாண்டே, தத்தா டிடோல்கர், சங்கர சாஸ்திரி,
பிரபாகர் தத்வவாதி, பாஸ்கர் தாம்லே, ஜனார்த்தன் ஹரி சிஞ்சால்கர், பாஸ்கர் ராவ் களம்பி என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாத முழுநேர ஊழியர்கள். இவர்களிலும் சிவராம்ஜி ஜோக்லேகர் என்பவர் தமிழகப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.சை வளர்த்தவர்களில் மிக முக்கியமானவர் 2001ல் தான் மரணமடைந்தார். பாஸ்கர்ராவ் கேரளத்தில் வேலை செய்தவர்களில் மிக முக்கியமானவர்.
இவர் 2002 ஜனவரி 12ல் தனது 82வது வயதில் காலமானார். சிவராம்ஜி மராட்டியராய் பிறந்து தமிழராய் தன்னை உருமாற்றிக் கொண்டவர். பாஸ்கர்ராவ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெற்றோர்களுக்கு பர்மாவில் பிறந்தவர். பிறகு பம்பாய் வந்து ஆர்.எஸ்.எஸ். தொடர்பு ஏற்பட்டு ஆர்.எஸ்.எஸ்.சை வளர்க்க கேரளப் பகுதிக்கு அனுப்பப்பட்டவர்.
மலையாளியாக தன்னை மாற்றிக் கொண்டவர். இதற்கிடையே மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். இதனால் ஆர்.எஸ்.எஸ். தடைசெய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். வேலைகளில் 20 ஆண்டுகாலம் தேக்கம் ஏற்பட்டது.
1964ல் தமிழ்நாடு, கேரளா என இருபகுதிகளாக ஆர்.எஸ்.எஸ், அமைப்பு பிரிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் 50க்கும் குறைவான இருந்தன கம்யூனிஸ்ட் கருத்துக்களும், பகுத்தறிவுக் கருத்துக்களும் ஓரளவு பரவிய நிலையில் ஆர்.எஸ்.எஸ். வளரும் சூழலே தமிழகத்தில் இல்லாமல் இருந்தது.
தமிழகத்தின் முதல் தலைமுறை ஆர்.எஸ்.எஸ். ஊழியரில் முக்கியமானவர் ராமகோபாலன் 1940களில் 17 வயதிலேயே அவர் ஆர்.எஸ்.எஸ்.இல் இணைந்தார். 1960களில் 25 தமிழர்கள் முழுநேர ஊழியர்களாகினர் ரங்கசாமித் தேவர் முன்னாள் அமைச்சர் கக்கன் என்பவரில் ஒன்றுவிட்ட தம்பி விஸ்வநாதன் ஆகியோர் முழுநேர் ஊழியர்களாகினர்,
அதிகாரத்தை வைத்து சதுராட்டம்
தி.மு.க., அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க. ஆதரவு நிலை எடுப்பதால் இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தனது விஷவித்தை விதைக்கும் வயலாக தமிழகத்தை தேர்ந்தெடுத்துள்ளது. மத்திய அரசில் செல்வாக்கும், ஏசுபோக முதலாளிகளின் பணமும். இந்த நாட்டிற்கு ஜனநாயகம் தேவையில்லை என்று கருதும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இணைந்து ஆதரிக்க ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கையோடு களத்தில் இறங்கியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தையும், பணத்தையும் வைத்து அறிவிற்கொவ்வாத. கருத்துக்களை பரப்புவதற்கும், அமைப்புகளை உருவாக்குவதற்கு வலை
விரித்துள்ளனர். மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் இதற்கும் மக்கள் வேறுபாடுகளைக் காண முடியாத அளவிற்கு அவர்களுக்கிடையே உறவுகள் இருப்பதால் மேலும் எளிதான முறையில் பரவிட முனைகிறது. தற்போது தமிழகம் முழுவதும் ஆயிரம் ஊர்களுக்கும் மேலாக தினசரி ஷாகாக்கள் நடக்கின்றன. இது தவிர 400 இடங்களில் வாராந்திர, மாதாந்திரக் கூட்டங்கள் நடக்கின்றன. இரண்டாயிரம் ஊர்களில் இடைவிடாத தொடர்பும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்களாக மட்டும் 146 பேர் உள்ளனர். 2000ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் “தேசிய விழிப்புணர்வு இயக்கம்” என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தியது. 2000 செப்டம்பர் 17 ஒரு மாதம் இது தமிழகத்தில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் 17ஆயிரம் பேர்களை இந்த இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபடுத்தியது. அவர்கள் 16 ஆயிரம் ஊர்களில் 20 லட்சம் குடும்பங்களைச் சந்தித்தனர். ஆர்.எஸ்.எஸ்.-ல் சேர 89,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 22 லட்சம் இலவச பிரசுரங்களும், 43 ஆயிரம் புத்தகங்கள் விலைக்கும் விநியோகிக்கப் பட்டன.
ஆர்.எஸ்.எஸ்.-இன் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) தமிழகத்தில் இருபது மாவட்டங்களில் செயல்படுகிறது. 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாதர் அமைப்பான ராஷ்ட்ரிய சேவிகா சமிதிக்கு 100 கிளைகள் உள்ளன. 2002ல் 500க்கும் அதிகமான பெண்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
தொழிலாளர் அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கம் 19 மாவட்டங்களில் செயல்படுகிறது. 82 தொழிற்சங்கக் கிளைகள் இணைப்புப் பெற்றுள்ளன.70 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயிகள் அமைப்பான பாரதீய கிசான் சங்கம் இப்போதுதான் காலூன்றத் தொடங்கியுள்ளது. முதல் மாநில மாநாடு நடந்து முடிந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.-இன் மதவெறிக் கல்வியை பரப்பும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு வித்யாபாரதி என்று அழைக்கப்படுகிறது. அதில் 100 பள்ளிகள் தமிழகத்தில் மட்டும் இணைந்துள்ளன.
சென்னை பெருநகரில் மட்டும் 15 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சில பள்ளிகளில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் இந்துத்துவா கருத்துக்களை சொல்லிக் கொடுக்கின்றனர்.
சேவா பாரதி எனும் அமைப்பு 250 இடங்களில் 500 தொண்டு பணித் திட்டங்களை 2003இல்நடத்தி வருகின்றன. காடு, மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்களிடையே “வனவாசி சேவா கேந்திரம்” எனும் அமைப்பு செயல்படுகிறது. சேலம் கல்வராயன் மலைப் பகுதியில் இதன் மையம் செயல்படுகிறது. இதில் எட்டாவது வரை படித்தவர்களை ஆசிரியர்களாக பயன்படுத்து கின்றனர். சேவை என்ற பெயரில் மதவெறிக் கருத்துக்கள் பரப்புகிறார்கள்: ஆசிரியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் சம்பளம்.
சமஸ்கிருத பாரதி எனும் அமைப்பு சமஸ்கிருத மொழியை பரப்புகிறது. அதில் 1.3 முழுநேர ஊழியர்கள் செயல்படுகின்றனர். தினசரி 2 மணி நேரம் என 10 நாட்கள் பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. அஞ்சல் வழிக்கல்வியும் உண்டு
பொது மக்களிடம் மதவெறி பொதுக் கருத்தை உருவாக்க விஜில் எனும் அமைப்பு செயல்படுகிறது. கோயில்களில் மதவெறி உணர்வுகளை ஊட்ட இந்து ஆலய பாதுகாப்புக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சமஸ்கார் பாரதி எனும் அமைப்பு கலைஞர்களிடம் செயல்படுகிறது.
வரலாற்றுத்துறையில் மதவெறி கருத்துக்களை புகுத்த இதிகாசங்கலான
யோஜனா எனும் அமைப்பு வேலை செய்கிறது. செல்வாக்கு மிக்க
பிரமுகர்களை சுவர்வதற்காகவே பாரத் விகாஷ் பரிஷத் உள்ளது. லகு
உத்யோக் பாரதி சிறுதொழில் அதிபர்களிடம் செயல்படுகிறது.
வரலாற்றை புராணங்களாக்கும் முயற்சி
பழந்தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு முதலான மொத்தத் தமிழ் இலக்கியங்களையும் மதவெறிக் கண்ணோட்டத்தோடு பதவுரை எழுதவும் ஆர்.எஸ்.எஸ். ஆசைப்படுகிறது.
2001ம் ஆண்டுவாக்கில் ஆர்.எஸ்.எஸ்.-ன் தமிழ் வார இதழில் அதற்கான அழைப்பு விடப்பட்டது. புதிய பக்தி இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது அந்த அழைப்பின் நோக்கமாக இருந்தது.
இந்து முன்னணியின் சார்பில் 2002 துவக்கத்தில் திருச்சியில் பாரதப்
பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா வாலிபர்கள் மனங்களிலே மதவெறிக் கருத்துக்களை விதைப்பதே இதன் நோக்கம் தமிழகத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள் உள்ளன. பஞ்சாயத்துகளுக்கு ஒருவர் என்ற அளவுக்கு வாலிபர்களை பயிற்சி அளித்து அனுப்ப இந்து முன்னணி விரும்புகிறது. இரண்டு வருட பயிற்சி வாலிபர்களுக்கு தரப்படும். ஒருவருடம் யோகாசனம், தியானம், இந்து மத சாஸ்திரங்கள்,
சிறுகதைகள் வாயிலாக மதவெறிக் கருத்துக்கள்
பயிற்சிக்கு வருபவர்களிடம் பதிய வைக்கப்படும் இரண்டாவது வருடம் நேரடியாக கிராமங்களில் பயிற்சி தரப்படும். கிராமக் கோயில்களைச் சார்ந்து இவர்கள் செயலாற்ற வேண்டும். கோயில்களை புதுப்பிக்க வேண்டும். கிராமங்களில் அனைவரும் கோயிலுக்கு அவசியம் வரும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக தெருக் குழுக்களை அமைக்க வேண்டும். சிறுவர். சிறுமியரிடம் சிறுகதைகள் மூலமாக மதவெறிக் கருத்துக்கள் மீது பற்றுதல் ஏற்படுத்த வேண்டும். பிரதானமாக இவர்கள் தலித் மக்களை நோக்கி செயல்பட வேண்டும்.
இவையே இந்து முன்னணி நடத்தும் கல்லூரியில் தயாராகும் வாலிபர்கள் செய்ய வேண்டியவை ஆகும். இவர்களுக்கு “தர்ம வீரர்கள்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊதியம் தரப்படும். இதற்கான பத்திரிக்கை விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. முதலாவது, இரண்டாவது குழுக்கள் தற்போது பயிற்சியில் உள்ளன,
பத்திரிக்கைத் துறையில் மதவெறிக் கருத்துக்களைப் புகுத்த மீடியா சென்டர் எனும் அமைப்பு உள்ளது. அதன் மூலம் செய்தியாளர் களுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. ஒரு முழுநேர ஊழியர் செயல்படுகிறார். ஆர்.எஸ்.எஸ். பற்றிய செய்திகள் தயார் நிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
செய்தியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் 50 தலைப்புகளில் பாடங்கள் உள்ளன. அதில் 25க்கும் மேற்பட்டவை இந்து மதவெறிக் கருத்துக்களை எப்படி பத்திரிக்கைத்துறையில் நுழைப்பது என்பது பற்றியவை. இந்தியா டுடே ஆசிரியர் குழுவில் பணியாற்றிய எஸ். மகாதேவன் எனும் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.எஸ்.எஸ்-ன் மாநிலத் தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவர் சங்கர மகாதேவன் என்ற பெயரில் விஜயபாரதத்தில் எழுதுகிறார். இவை மட்டுமல்ல விஷ்வ ஹிந்து பரிஷத், கிராமப் பூசாரிகள் பேரவை, இந்துக் குடும்ப கோட்பாட்டை பாதுகாக்க வேண்டும் எனும் கருத்தை மட்டுமே பிரச்சாரம் செய்யும். “கிருஹணி” எனும் அமைப்பு உள்பட இன்னும் ஏராளமான அமைப்புகள் தமிழகத்தில் செயல்படுகின்றன.
இவை மட்டும் அல்லாது ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பயின்று வெளியேறும் உறுப்பினர்களின் விருப்பம், தேவைக்கேற்ப புதுப்புது அமைப்புகளும் உருவாகி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன இந்த அமைப்புகளின் ஊற்றாக ஷாகா உள்ளது. இந்த ஷாகாக்களில் மதவெறி இலக்கியங்களை ஆர்.எஸ்.எஸ் படிக்கத் தூண்டுகிறது.
மதவெறி இலக்கியங்கள்
சனாதன தர்மம் என்றும் இந்துமத தர்மம் என்றும் அழைக்கப்படுகிற (சனாதன தர்மம் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு காலகாலமாக என்றென்றும் நிலைத்து நிற்கும் வாழ்முறை என்று அர்த்தம்) சனாதன தர்மத்தை கால மாறுதலுக்கேற்ப திருத்தி வளர்க்கும் ஒரு நீண்ட முயற்சி இந்து மதத்தில் உள்ளது. மார்க்சிய அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாய இத்தகைய முயற்சிகள் பழங்காலத்தில் நடந்ததை ‘இந்திய தத்துவ இயலில் நிலைத்தனவும், அழிந்தனவும்’ எனும் நூலில் விளக்குகிறார். பண்டைய உலகாயத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் மீது கட்டப்பட்ட பார்ப்பனீய கோபுரமே இந்து மதம். வெவ்வேறு காலங்களில் தனக்கெதிராக எழுந்த எதிர்ப்புத் தத்துவங்களை அனைத்தையும் கெடுத்து தனக்குள் புதைத்து வைத்துள்ள கல்லறையே இந்து மதம் என்றும் அவர் தமது உலகாயதம் எனும் நூலில் 1959களிலேயே விளக்குகிறார்.
சனாதன தர்மம் என்பது சமூகத்தை பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர எனும் நான்கு பிரிவாகப் பிரிப்பது என்று விளக்கப்படுகிறது. இந்த சனாதன தர்மத்தை கால மாறுதலுக்கேற்ப திருத்தி பாதுகாக்கும் முயற்சியையே ஆர்.எஸ்.எஸ்.சும் கடைபிடிக்கிறது.
இதுவரை வரலாறு அறிந்த இந்திய மரபு இலக்கியம் அனைத்துக்கும் தானே வாரிசு என ஆர்.எஸ்.எஸ். பேசுகிறது. இந்திய சமூகத்தின் அனைத்து முற்போக்காளர்களின் வழிகளையும் தான் பின்பற்றுவ
தாகவும் அது காட்டிக் கொள்கிறது.
சுரண்டலை காக்கும் தத்துவ கேடயம்
ஆனால் உண்மையில் தனக்கே உரித்தான ஒரு மதவெறி இலக்கியத்தை ஆர்.எஸ்.எஸ். வைத்துள்ளது. அறியப்படுகிற இந்திய மரபுச் சிந்தனையின் சுரண்டல் ஆதரவு கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ். வளர்த்துச் செல்கிறது. அது தனது முன்னோடிகளாக ஆதிசங்கரரையும், மநுவையும், சாணக்கியரையும் போற்றுகிறது.
சனாதன தர்மத்தை காலமாறுதலுக்கேற்ப திருத்தி வளர்த்துச் செல்லும் முயற்சியாகவே ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளின் நூல்கள்
உள்ளன. சாவர்க்கர் எனும் ஆர்.எஸ்.எஸ். அறிவாளி ஆயிரமாண்டு மதவெறி வரலாறு எழுதியுள்ளார். இந்தியாவின் மீது கிரேக்சு அரசன் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தது முதல் நாடு விடுதலை ஆன காலம் வரை அது பேசுகிறது. வெளிநாட்டார் படையெடுப்புகளால் இந்துக்களுக்குத்தான் அவமானங்கள் ஏற்பட்டன என்று நூல் பேசுகிறது. கொலை வெறி உணர்வோடு நூல் எழுதப்பட்டு உள்ளது. அந்த வரலாறே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கு போதிக்கப்படுகிறது
மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கரின் சொற்பொழிவுத் தொகுப்புகள் ‘ஞானகங்கை’ எனும் நூல் தொகுதியாக வந்துள்ளன. ஏற்றதாழ்வு என்பது இயற்கையின் பிரிக்க முடியாத அம்சம். ஆன்மிகத் துறையில் தான் சமத்துவம் பொருந்தும். உலகியலில் ஆத்மா பல்வேறு ஏற்ற தாழ்வுகளோடு தான் காட்சியளிக்கிறது. இந்த ஏற்ற தாழ்வான சமூகமே தெய்வம். அதை விளக்குவதே தேசபக்தி. ஏற்றத் தாழ்வுகளை வரம்புக்குட்படுத்துவதும், ஏற்றத் தாழ்வால் வரும் சுசப்புணர்வை போக்க பாடுபடுவது மட்டுமே போதும் என்று அதில் கோல்வால்க்கர் கூறுகிறார் ஞானகங்கை – முதல்பாகம்) கம்யூனிசத் தத்துவம் இந்திய சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை தடுக்கும் நோக்கம் நூவில் தெளிவாக தெரிகிறது.
பாரதீய ஜனதாவின் பழைய பெயர் ஜனசங்கம் அதன் நிறுவனர் தீனதயாள் உபாத்யாயா. அவர் சனாதன தர்மத்தை வளர்க்கும் முயற்சியில் அவரது பங்காக “ஒருங்கிணைந்த மனிதத்துவம்” என்னும் சுருத்தை நூலாக வெளியிட்டுள்ளார்.
இவை சில முக்கிய நூல்கள் மட்டுமே மதவெறிக் கருத்துக்களை சிறு சிறு கதைகளாக்கி குழந்தை இலக்கியத் தொகுதி வரை ஏராளமான மதவெறி இலக்கியங்களை ஆர்.எஸ்.எஸ். அறிவாளிகள் உருவாக்கி உள்ளனர். இந்தக் கருத்துக்களை ஒவ்வொரு தனி மனிதனிடம் குழந்தை பருவம் முதலே பதிய வைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உழைக்கிறது, இவையே ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளும் மதவெறி இலக்கியமும் பற்றிய சிறு அறிமுகம்.
முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே வெட்டுகிறது என்கிறது மார்க்சியம். அதே போல ஆர்.எஸ்.எஸ்.சின் மதவெறி இலக்கியத்திலும்
முரண்பாடுகள் இல்லாமல் இல்லை
இந்து மத வரலாற்றில் முதன்முறையாக ஆர்.எஸ்.எஸ், தனது ஷாகாக்களில் இந்து சமத்துவம், சகோதரத்துவம் பேசுகிறது அதில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஒரே உடை, செய்முறை பயிற்சிகள் என சமத்துவ நடைமுறைகள் உள்ளன சமத்துவமற்ற சமூகத்தை உருவாக்க சமத்துவ உணர்வோடு உழைக்கும் ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். உருவாக்குகிறது. முழு பரிணாமம் அடைந்த ஒரு நயவஞ்சக சூழ்ச்சியின் நடைமுறை இது!
அசமத்துவத்தை வளர்க்க சமத்துவமாக பழகி உழைக்கிறது. ஆர்.எஸ்.எஸ், இந்துக்கள் எல்லோரும் சகோதரர்கள் என்கிறது. அது உண்மை என்றால் ஏன் சமூகம் ஏற்றத் தாழ்வாகவே இருக்க வேண்டும். என்று கோல்வால்கர் விரும்புகிறார்? ஆன்மிகத் துறையில் மட்டுமே சமத்துவம் பொருந்தும் உலகியலில் பொருந்தாது என்று ஏன் சொல்லுகிறார்? எனது உழைப்பின் பலனை நான் அனுபவிப்பதும், பிறர் அனுபவிப்பதும் ஒன்றே. ஏனென்றால் ஒரே பரம்பொருள்தான் என்னிலும், பிறரிலும் உள்ளது என்று ஏன் சொல்ல வேண்டும்?
எனது பெயரில் சொத்து இருப்பதும் ஒன்றே எனது தொழிலாளி பெயரில் சொத்து இருப்பதும் ஒன்றே என்று முதலாளிகள் நினைத்து எழுதி வைத்துவிட வேண்டும் என்று ஏன் பேசவில்லை? இத்தகைய கேள்விகளால் ஆர்.எஸ்.எஸ்சை அம்பலப்படுத்த முடியும்.
ஆர்.எஸ்.எஸ்.சின் மதவெறி இலக்கியம் உள்ளிட்ட இந்திய மரபுச் சிந்தனையின் சுரண்டல் ஆதரவு கருத்துக்களை மார்க்சியத்தின் இயக்கவியல் ஆய்வு முறையால் தகர்த்து விடமுடியும்.
ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டுத் தாக்குதல்களை எதிர் கொள்ள லெனினின் கருத்துக்களும் உதவுகின்றன.
“முதலாளிகளின் எதிர்ப்பை அதன் எல்லா வடிவங்களிலும் நாம் எதிர்க்க வேண்டும். ராணுவ, அரசியல் துறைகளில் எதிர்ப்பை மட்டுமல்ல, மிக ஆழமான, வலுமிக்க, சித்தாந்தத்துறை எதிர்ப்பையும் வென்றாக வேண்டும்’
என்கிறார் லெனின்.(லெனின் தொகுப்பு நூல் 31 பக்கம் 363 – 373)
“ஒவ்வொரு தேசியப் பண்பாட்டிலும் ஜனநாயக மற்றும் சோசலிச படைப்புக் கூறுகள் உள்ளன. அவைகள் ஆரம்ப அடிப்படை கூறுகளின் வடிவில் இருக்கலாம் ஏனெனில் ஒவ்வொரு தேசிய இனத்திலும், உழைக்கிற சுரண்டப்படுகிற மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் ஜனநாயக, சோசலிச கோட்பாடுகள் தவிர்க்க. முடியாதபடி தோன்ற வழி செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு தேசிய இனமும் வடிவத்தில் முதலாளித்துவ பண்பாட்டையும் கொண்டுள்ளது. (அனேக நாடுகள் பிற்போக்கான’ சமயஞ் சார்ந்த பண்பாடுகளையும் கொண்டுள்ளன) அவைகள் வெறும் கூறுகள் அல்ல. ஆதிக்கம் செலுத்துகிற பண்பாடுகளாகும்” என்றும் லெனின் கூறுகிறார் (தேர்வு நூல்கள்: தொகுதி 20 பக்கம் 24}
லெனின் கூறுகிற “ஒவ்வொரு தேசியப் பண்பாட்டிலும் உள்ள ஜனநாயக சோசலிக கூறுகள்” மார்க்சிய ஆலமரத்தின் விழுதுகளாக” மாற்றப்பட வேண்டும். இந்தப் பணி நிறைவேற்றப்பட்டால் தேசிய பண்பாட்டை சுரண்டல் ஆயுதமாக ஆளும் வர்க்கம் பயன்படுத்த முயலும் முயற்சி முறியடிக்கப்படும்.
இந்திய சிந்தனை மரபின் சுரண்டல் ஆதரவு பகுதிக்கு ஆயிரம் ஆண்டு கால திறமை இருக்கிறது. அதை ஆர்.எஸ்.எஸ். மூலமாக இந்திய ஆளும் வர்க்கம் ஆயுதமாக பயன்படுத்துகிறது. உழைக்கும் மக்களின் வஜ்ஜிராயுதமாக இயக்கவியல் சிந்தனை முறை உள்ளது. ஆளும் வர்க்கத்தின் ஆயிரம் ஆண்டுகால சூழ்ச்சிகளைக்கூட இயக்கவியல் ஆய்வு முறையால் சில ஆண்டுகளில் தகர்த்தெறிய முடியும். அந்த வழியில் மக்கள் ஆர்.எஸ்.எஸ். -இன் பாசிச ஆசைகளை தகர்ப்பார்கள்.
தகவல்கள் ஆதாரம் : 2001 – 2002 இரண்டாண்டுகாய விஜயபாரதம் வார இதழ்கள்


Leave a comment