இந்தியாவில் பாசிஸம்

Vijayashankar Ramachandran

தோழர் Kuppuswamy Ganesan  (அருந்ததி ராயின் God of Small Things, Ministry of Utmost Happiness ஆகியவற்றை மொழிபெயர்த்தவர்)
அவர்களின் பதிவு:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு The Wire இதழின் நேர்காணலில் கரண் தாப்பருக்கு அருந்ததி ராய் அளித்த பதில்:

“இந்தியாவில் மட்டுமல்ல, பொதுவாகவே எல்லா இடங்களிலும் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் பாசிஸத்தின் அறிகுறிகளை ஒரு பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். அவற்றை இப்போது உரக்க வாசிக்கிறேன், நீங்களும், வாசகர்களும் இந்த அறிகுறிகளை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறீர்களா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இப்போதெல்லாம் ‘பாசிஸம்’ என்பது ஒரு சகஜமான, சாதாரணமாகப் பயன்படுத்தும் சொல்லாகிவிட்டிருக்கிறது. அதனால் இந்தக் கேள்வியை எதிர்பார்த்து, கொஞ்சம் வீட்டுப்பாடம் செய்து இந்த அறிகுறிகள் பட்டியலைத் தயாரித்தேன்:

ஒன்று: ‘ஒரு கடுமையான சமூக நெருக்கடியை நடைமுறையில் இருக்கும் சமூகப் படிநிலைக்கு அச்சுறுத்தலாகக் காண்பது.’ அதுதான் ஆரம்பம். மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வந்துவிடுமோவென்ற அச்சம் தலையெடுக்கிறது. உடனே புதிய ஜாதி கட்சிகள் முளைக்கத் தொடங்குகின்றன: மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதள், முலாயம் யாதவின் சமாஜ்வாடி கட்சி.

இரண்டு: மிகவும் பரிசுத்தமான உயர்குடி சூப்பர்மேன் பிம்பம் ஒன்றை கற்பனையில் உருவாக்கி, அதன் வழியே தேசிய எழுச்சியை வீரியமாக்குவதற்காக புராண காலத்திய தொன்மங்களை மீட்டெடுப்பது. என்னவென்று புரிகிறதா? பிராமணர்கள் என்போர் பூதேவர்கள் – பூமியில் வாழும் தெய்வங்கள் – என்று நம்பும் ஒரு மேலாண்மைச் சமூகம் ஒரு பக்கத்திலிருந்து ஒன்னொன்றுக்கு பக்கவாட்டில் இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. 

மூன்று: ‘தேசிய ஆளும் வர்க்கத்தின் சில பிரிவினரின் ஆதரவோடு மாபெரும் கூட்டு இயக்கம் ஒன்றை நடத்துவது.’ பாபர் மசூதியை இடித்துத் தள்ளும் குறிக்கோளோடு அத்வானியின் ரத யாத்திரை நடக்கிறது; அதே நேரத்தில் இந்தியச் சந்தைகள் திறந்து தனியார்மயம் அதீதமாக அதிகரிக்கிறது. இதன் விளைவாக இடஒதுக்கீட்டு தத்துவமே நீர்த்துப்போகிறது. இது உத்தர பிரதேச தேர்தலில் முக்கியப் பங்காற்றப் போகிறது.

நான்கு: ‘மேலாதிக்கப் போக்கு கொண்ட அராஜக கட்சி ஒன்றின் எழுச்சி.’

ஐந்து: ‘நாட்டுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாக புனைச்சுருட்டுகளைக் கட்டமைப்பது.’ இவை பெரும்பாலும் வகுப்பு, மதம், இனம் சார்ந்ததாகவே இருக்கும்.

ஆறு: ‘முதலாளி வர்க்கத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் கிளர்ச்சிகளை மூர்க்கத்தனமாக அடக்கி நசுக்கும் அராஜக அரசாங்கம்.’

ஏழு: ‘சுதந்திரமான ஜனநாயகச் சிந்தனை வெளிப்பாடுகளுக்குத் தடை விதிப்பது.’

எட்டு: ‘எதிர்தரப்பினரைப் பொது இடங்களில் வைத்துத் தாக்குவது, ஆயுதங்களோடு வந்து மிரட்டுவது, சில நேரங்களில் கொல்வது.’ உ-ம்: ஆர்எஸ்எஸ் படையினர், பஜ்ரங் தள், விஸ்வ இந்து பரிஷத்.

ஒன்பது: ‘ஆணாதிக்க மிரட்டல்கள், பெண்ணிய எதிர்ப்பு, ஜாதி வெறித் தாக்குதல்கள் (ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவை நிறவெறித் தாக்குதல்கள்) அந்நியர் வெறுப்பு.’

பத்து: ‘மற்றவர்கள் தனக்கு தீங்கு செய்வதற்கு எப்போது தயாராக இருப்பதைப் போன்ற பிரமையில் இருப்பது.’ வில் பாசிஸம்

பத்து: ‘மற்றவர்கள் தனக்கு தீங்கு செய்வதற்கு எப்போது தயாராக இருப்பதைப் போன்ற பிரமையில் இருப்பது.’

Leave a comment