Latest
-
Claustropolis: 1984
“Claustropolis: 1984” is excerpted from a forthcoming novel. In Bhopal, I could lie low. In Bhopal, there would be instructions for me. Because I had been told not to take the express, I traveled on a local, in an unreserved bogie. The whiskey was Director’s Special, a parting gift from Gupta’s people. I didn’t even…
ALL Posts
-
After 11 years at Indian Express as columnist, I’m now playing this role at The Wire, one of the most professional & courageous Indian media outlets. My 1st op-ed deals with the dialectic between Hindutva and caste politics which is bound to gain momentum. Christophe Jaffrelot 09/Aug/2024 5 min read The tactical dimension of the…
-
Liberalism is in trouble. It will take a concerted act of will to save it. Alexandre Lefebvre Aug 12, 2024 Today, we’re pleased to present an excerpt from Alexandre Lefebvre’s excellent new book “Liberalism as a Way of Life.” Alexandre will also be joining us on a coming episode of The Good Fight podcast. To…
-
It has become fashionable to invoke Karl Popper’s “paradox of tolerance” to justify restrictions on free speech. That’s just plain wrong. Yascha Mounk Aug 08, 2024 185 27 Share Every Thursday, I send you an ambitious essay that doesn’t need a news hook; thanks for reading this week’s column. Every Saturday, we publish an interview…
-
It has become fashionable to invoke Karl Popper’s “paradox of tolerance” to justify restrictions on free speech. That’s just plain wrong. Yascha Mounk Aug 08, 2024 Every Thursday, I send you an ambitious essay that doesn’t need a news hook; thanks for reading this week’s column. Every Saturday, we publish an interview with a major…
-
அறிமுகம்: counter currents என்ற இணையத்தில், அம்பேத்கரின் இறுதி கால பேச்சுக்களை, எழுத்துக்களை கொண்டு, அம்பேத்கருக்கு பிற்பாடு செயல்பட்ட, செயல்பட்டு கொண்டிருக்கும் தலித் செயற்பாட்டாளர்கள், அம்பேத்கரிஸ்ட்டுகள் ஆகியோரை விமர்சிக்கும் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பே இக்கட்டுரை. சமூக மாற்றித்திற்காக செயல்படும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ள விவாத்தை உருவாக்கும் என நம்புகிறோம். டாக்டர் அம்பேத்கர் (1891-1956) அவரது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று நாடு முழுவதும் நினைவு கூறப்படுகிறார். அவரை நினைவு கூறும் இந்நிகழ்வு பலருக்கும் பகட்டான சடங்காக மாறிவருகின்றது. குறிப்பாக, அடக்குமுறை செலுத்துபவர்களும், ஏமாற்றுக்காரர்களும் சீரழிந்த ஆட்சியாளர்களும் அன்றைய நாளில் செய்யும் நிகழ்வுகள் ஊடகங்களில் பிறர் நடத்தும் நிகழ்வுகளை விட அதிகமாக இடம் பிடிக்கின்றன. அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் என்ன பேசினார், என்ன செய்தார், எதனை ஆய்வு செய்தார் என்பதை விடவும் அம்பேத்கருக்கு கற்சிலைகள் வைப்பதிலேயே இத்தகையோர் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். கற்சிலை வழிபாடு இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியலாக்கப்பட்டு வரும் நிலையில் அம்பேத்கரையும் சிலையாக்குவது என்பது இந்தியாவைப் பொறுத்தவரை, ஒருவேளை இயல்பான ஒரு நடவடிக்கையாக கூட இருக்கலாம். எனினும், இத்தகைய சடங்குகளைக் கடந்து அம்பேத்கரின் இறுதி நாட்களின் அனுபவங்களையும் கருத்துக்களையும் ஆராய்வது நமக்கு பயனுள்ளது. கடந்த காலத்தை ஆராய்ந்தால் அம்பேத்கரையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் சங்கபரிவாரங்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மோடி அரசும் எவ்வளவு எதிர்த்து வந்திருக்கின்றன என்பதைக் காண முடியும். மோடி ஆட்சியில் அம்பேத்கரை தவறாக கட்டமைக்கிறார்கள் என்றும் சிலர் கவலைப்படுகின்றார்கள். ஆனால் இவர்கள் கடந்த கால நிகழ்வுகளிலிருந்தே இவ்வாறு கூறுகின்றார்களே தவிர, தற்போதைய நிலவரத்தைப் பொறுத்து அல்ல. எத்தகைய விமர்சனமும், அது எதிரியைப் பற்றியதாக இருந்தாலும் கூட, அறிவுஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களால் செய்யப்படும் விமர்சனமாக இருந்தாலும்கூட, புறநிலையாக இருக்கும்பொழுதுதான் அது ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். இல்லையெனில் அது பாரபட்சமானதாகத்தான் இருக்கும். தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள அம்பேத்கரிய அறிஞர் ஆனந்த் தெல்தும்டே இது குறித்து முன்வைத்துள்ள விசயங்கள் ஏப்ரல் 21, 2021-ல் வெளியாகியுள்ளது. “அம்பேத்கரை பயன்படுத்துவதை சங் பரிவாரங்கள் இன்றைக்கு துவங்கவில்லை. 1980-களிலிருந்தே அது துவங்கிவிட்டது. இந்து மதத்தைப் பற்றிய அம்பேத்கரது கூற்றுக்களால், சங் பரிவார அமைப்புகளுக்கு ஆரம்பத்தில் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வது வெறுப்புக்குரியதாக இருந்தது. ஹெட்கேவர்- முன்ஜே- கோல்வால்கர் காலத்தில் அவர்கள் அம்பேத்கரிடமிருந்து விலகியே இருந்தனர். அம்பேத்கரது பெயரை மட்டும் குறிப்பிடாமல் அம்பேத்கர் ஆதரித்த அனைத்து விசயங்களையும் வெளிப்படையாகவே எதிர்த்து வந்தனர். மேலும், அம்பேத்கரிய தலித்துகளின் ஆதரவு இல்லாமலேயே சாதி இந்துக்களை மட்டும் வைத்துக்கொண்டே தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் ஆர்எஸ்எஸ்க்கு இருந்து வந்தது. ஆனால் பாலாசாகேப் தியோரஸ் ஆர்எஸ்எஸ் தலைவரான காலத்தில்தான் தெளிவான உத்தியை வகுத்துக் கொடுத்தார். ஆர்எஸ்எஸ்-ன் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமானால் அரசியலமைப்பு சட்டகத்தை தவிர்த்துவிட்டு நிற்க முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எவ்வளவு சாதிகளை வளைக்க முடியுமோ அவ்வளவு சாதிகளையும் வளைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. தியோரஸின் வழிகாட்டுதலின்படி தான் அதிகாலையில் வணங்கப்பட வேண்டிய தலைவர்களின் பட்டியலில் அம்பேத்கரும் சேர்க்கப்பட்டார். இது மெல்ல மெல்ல அவரை காவிமயமாக்கும் முயற்சிகளோடு சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதற்காகவே சமஜிக் சம்ரஸடா மஞ்ச் என்னும் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டது. அம்பேத்கரை இந்துத்துவத்தின் ஆதரவாளர் என்று பிரச்சாரம் செய்யவும், அம்பேத்கரும் ஹெட்கேவரும் நண்பர்கள் என்று தலித்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும், அம்பேத்கர் முசுலீம்களுக்கு விரோதி என்று காட்டுவதற்காகவும் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் தயார் செய்யப்பட்டு தலித்துகள் மத்தியில் பரப்பப்பட்டன. அவர்கள் ஏற்கெனவே பழங்குடி மக்களும் இந்துக்கள்தான் என்று மடைமாற்றம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பேத்கரியவாதிகள் அல்லாத பிற தலித்துகள் ஏற்கெனவே சங்க பரிவாரங்களோடு சேர்ந்து விட்டனர். இம்முறை எஞ்சியிருப்பது அம்பேத்கரிய தலித்துகள் மட்டுமே!” ****** அம்பேத்கரது பிம்பத்தை கட்டமைப்பதில் அரசின் பங்கு உண்மையில் இது சங்க பரிவாரங்களின் கொள்கை மாற்றம் மட்டுமல்ல. இது பிற்போக்கான மற்றும் ஒடுக்குமுறை செய்யும் இந்திய அரசின் திட்டமேயாகும். தெல்தும்டே கூறுவதாவது: “அம்பேத்கரது பிம்பத்தைக் கட்டமைப்பதில் அரசின் பாத்திரம் தவிர்க்கக் கூடாதது. அம்பேத்கரது நினைவுச் சின்னங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு அப்பால், அம்பேத்கர் மையங்களை பரவலாக உருவாக்குவதில் இந்திய அரசு கவனம் செலுத்தியது. பல்கலைக்கழகங்கள் அம்பேத்கரைப் பற்றிய ஆய்வுகளில் திடீரென ஆர்வம் காட்டின. மேட்டுக்குடிகளுக்கு இதுநாள்வரை அருவருப்பான நபராக இருந்துவந்த அம்பேத்கர் திடீரென மதிப்பிற்குரிய நபராக மாறினார். அம்பேத்கர் மீது மோடி வெளிப்படுத்தும் பக்தி இதை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.”அம்பேத்கர் ஆக்ராவில் 18 மார்ச், 1956 அன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். டிசம்பர் 6-ம் தேதி அவர் மரணமடைவதற்கு முன் அவர் ஆற்றிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரைகளில் இதுவும் ஒன்று. இந்த உரையானது மற்ற விசயங்களோடு சேர்த்து, அம்பேத்கரது தீராத மன வருத்தத்தையும் வெளிப்படுத்தியது. 1940-களில் உயர் இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் அம்பேத்கருக்கு இருப்பது கண்டறிப்பட்டது. 1955 முதலே அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்து, 1956-ல் தீவிரமடைந்தது. ஒருவேளை அம்பேத்கருக்கு தனது மரணத்தைப் பற்றி தெரிந்திருக்கலாம். ஓய்வு எடுத்துக் கொள்ளாத ஒரு தலைவரது ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள அம்பேத்கரது மனைவியும், மருத்துவர் சவிதாவும், உதவியாளர் ரட்டுவும் கடும் சிரத்தை மேற்கொண்டனர். அம்பேத்கர் தனது எழுத்துக்களை முடிப்பதில் குறியாக இருந்தார். உடல்நலக்குறைவு இருந்தபோதிலும், அம்பேத்கர் தனது இறுதி நூலான “புத்தரும் அவரது தம்மமும்” என்னும் மிக முக்கியமான, பெரிய நூலை எழுதுவதில் அதிக கவனம் செலுத்தினார். இப்புத்தகம் அம்பேத்கரது மறைவிற்குப் பிறகு 1957-ல் வெளியிடப்பட்டது. மார்ச் 15-ல் அந்த நூலின் முன்னுரையை எழுதி முடித்தபிறகு, மூன்று நாட்கள் கழித்து, உடல்நலக்குறைவோடு ஆக்ராவில் உரையாற்றினார். அந்த உரையைப் பற்றித்தான் இங்கு நாம் பார்க்கப்போகிறோம். பத்தாண்டுகள் தீவிர அரசியலுக்குப் பிறகு ஒரு அரசியல் தலைவர் எடுத்துக் கொள்ளும் சுய விமர்சனமாகவே இந்த உரையைப் பார்க்க வேண்டும். இந்தியர்களுக்கு இது காண்பதற்கு மிகவும் அரிய ஒன்றாகும். தற்போதைய தலைமுறைக்கு விசயங்களை துல்லியமாக புரிந்துகொள்ளவும் அதற்கேற்ப செயல்படவும் இந்த உரை பயன்பட வேண்டும். எதற்குமே பலனளிக்காத குருட்டுத்தனமான துதிபாடலில் தனது தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார். அம்பேத்கர் தற்போது வெறும் கற்சிலையாக சுருக்கப்படுகின்றார். சங்க பரிவாரங்களை உள்ளடக்கிய ஆளும் வர்க்கங்கள் ஊடகங்களின் ஆதரவோடு செய்யும் இந்தச் செயல்களை, இன்றைய சூழ்நிலையில் நாம் மிகவும் கவனமாக அணுக வேண்டியுள்ளது. Countercurrents.org-ல் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதுபவரான தலித் சமூகத்தை சார்ந்த அம்பேத்கரியவாதி மற்றும் செயற்பாட்டாளர் SR Darapuri I.P.S. (Retd.) ஆகஸ்ட் 26, 2016 அன்று Countercurrentss.org-ல் வெளியிட்ட கட்டுரையில், இதுவரை இந்தியில் மட்டுமே இருந்து வந்த அம்பேத்கரின் ஆக்ரா உரையை தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த கட்டுரையில் அந்த உரை முழுவதுமாக இல்லையென்றாலும், அவரது உரையின் சாராம்சம் சில முக்கியமான அம்சங்களோடு விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த உரையை அம்பேத்கர் நிகழ்த்திய காலத்தில் அரசியலின் மீதும் இந்து மதத்தின் மீதும் அம்பேத்கர் கொண்டிருந்த விரக்தியானது உச்சத்தில் இருந்தது. அவரது கசப்பான அனுபவங்களே இதற்கு சான்றுகளாகும். இந்த கட்டுரை அவரது உரையிலிருக்கும் ஒரு சில விசயங்களை மட்டும் சுருக்கமாக விவாதிக்கின்றது. அரசியல் விரக்தி பற்றி அவரது உரையில் இல்லையென்றாலும், அவரது மனதில் அது இருந்தது என்பது பாராளுமன்றத்தில் வெளிப்பட்டது. அது பின்வருமாறு: “நான் ஒரு பணியாள்… இந்த அரசியலமைப்புச் சட்டம் யாருக்குமே பொருந்தாது” : அம்பேத்கர் அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் பற்றிப் புகழ்ந்து பேசும்போது பலரும் அம்பேத்கரை அரசியலமைப்பின் சிற்பி என்று இல்லாத ஒன்றை மிகையாக கூறுகின்றனர். இரண்டுமே தவறான தகவல்கள், இவை ஆளும் வர்க்கங்கள் மக்களை ஏமாற்றுவதற்காகவே பரப்பி வருபவை ஆகும். அம்பேத்கர் ஒரு அரசியலமைப்பு வரைவுக்குழுவின் உறுப்பினர் மற்றும் அதன் தலைவர் மட்டுமே. அம்பேத்கர் தனது எண்ணங்களை கசப்பான வார்த்தைகளில் பாராளுமன்றத்திலே கூறியிருக்கின்றார். செப்டம்பர் 12, 1953 இல் பாராளுமன்றத்தில் நடந்த ஒரு விவாதத்தின் போது, அம்பேத்கர் கூறியது: “மக்கள் எப்போதுமே என்னிடம் கூறுவது: ‘ஓ, நீங்கள்தானே அரசியலமைப்பின் சிற்பி’. “எனது பதில் நான் ஒரு பணியாளாக மட்டுமே இருந்தேன். எனக்கு சொல்லப்பட்ட வேலையை, எனது விருப்பத்திற்கு எதிராக நிறைய செய்தேன்.” (ஆங்கிலத்தில்: My answer is I was a hack. What I was asked to do, I did much against my will.”) இராஜஸ்தானைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அம்பேத்கரிடம் “நீங்கள் அரசியலமைப்பை ஆதரித்து பேசியிருக்கிறீர்களே” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அம்பேத்கர் “வழக்கறிஞர்களாகிய நாம் நிறைய விசயங்களை ஆதரித்து வாதிடுகின்றோம்” என்று பதிலளித்துள்ளார். அன்றைய உள்துறை அமைச்சர் கட்ஜூ அரசியலமைப்பை உருவாக்கியதற்கு அம்பேத்கரே பொறுப்பு என்று கூறினார். அதற்கு அம்பேத்கர், “நீங்கள் உங்களது தவறுகளுக்காக என்னை குற்றஞ்சாட்ட விரும்புகிறீர்களா?” என்று கேள்வியெழுப்பினார். மேலும், “எனது நண்பர்கள் அரசியலமைப்பை நான்தான் உருவாக்கினேன் என்று என்னிடம் கூறுகின்றார்கள். ஆனால், அதனை எரிக்கும் முதல் ஆளாக நான்தான் இருப்பேன் என்று நான் சொல்வேன், எனக்கு அது தேவையற்றது. அது யாருக்கும் பொருந்தாது.” பின்னாட்களில் இதனை நீர்த்துப்போகும்படி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இது அம்பேத்கரினது மனதை வெளிப்படுத்துகின்றது என்பதனை ஆனந்த் தெல்தும்டேவைப் போன்ற அம்பேத்கரிய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர். அவரது பிரபல வாழ்க்கை வரலாற்றாசிரியர் தனஜெய் கீர் 1954-ல் அம்பேத்கரை நிறைய ஆழமான நேர்காணல்கள் கண்டு, பல விளக்கங்கள் கேட்டுக் கொண்ட பின்பே அதனை வெளியிட்டார். மிகவும் பொதுவாக, நாடு முழுவதிலும் உள்ள அம்பேத்கரது சிலைகள் அவர் நிராகரித்த ஒரு புத்தகத்தை அவர் கையில் வைத்திருப்பதாகவே உள்ளன. அந்தப் புத்தகத்தை அவர்கள்தான் அம்பேத்கரின் கையில் திணித்தார்கள். அவர்கள் அந்தப் புத்தகத்தை நவீன பகவத் கீதை என்று தெய்வமாக்குகின்றார்கள். மேலும், அவர்கள் விரும்பியபோதெல்லாம், தண்டனையின்றி அதனை மீறுகின்றார்கள். ******…

